ஆப்நகரம்

கோவையில் காளைக்கு மரியாதை!! மெரினாவிலும் எழுப்பப்படுமா?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடந்த போராட்டத்தை நினைவு கூறும் வகையில் கோவை வ.வ.சி., மைதானத்தில் காளை வடிவத்தில் சுவர் சித்திரம் வரையப்பட்டுள்ளது.

TOI Contributor 30 Jan 2017, 1:09 pm
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடந்த போராட்டத்தை நினைவு கூறும் வகையில் கோவை வ.வ.சி., மைதானத்தில் காளை வடிவத்தில் சுவர் சித்திரம் வரையப்பட்டுள்ளது.
Samayam Tamil kaalai image drew at coimbatore does it happen at marina
கோவையில் காளைக்கு மரியாதை!! மெரினாவிலும் எழுப்பப்படுமா?


ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் அனுமதிக்க வேண்டும், பீட்டாவை தடை செய்ய வேண்டு என்று தமிழகம் முழுவதும் கடந்த 17ஆம் தேதி போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டம் உலகமே அதிசயிக்கும் வகையில் அமைதிப் போராட்டமாக நடந்தது. இந்நிலையில், சென்னை மெரினாவில் திரண்டிருந்த இளைஞர்களை வெளியேற்றுகிறோம் என்று கடந்த 23ஆம் தேதி களத்தில் காவல்துறை குதித்தது. இது பின்னர் சென்னை முழுவதும் வன்முறையாக வெடித்தது. அமைதியாக நடந்த போராட்டத்தை வன்முறையாக மாற்றியது சமூக விரோதிகள் என்று கூறினாலும், இதை தற்போது நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் மாநில அரசும், காவல்துறையும் உள்ளன.

இதற்கிடையே, ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்ததை நினைவு கூறும் வகையில் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும், முக்கியமாக சென்னை மெரினாவில் காளை சிலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், இதற்கு மாநில அரசு அனுமதி அளிக்க வேண்டும். இந்த விஷயத்தில் மாநில அரசு மவுனமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி வருகிறது.

பொதுவான பார்வையில் பார்க்கும்போது, தமிழர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்த காளைக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது.

Kaalai image drew at Coimbatore; is it happen at Marina

அடுத்த செய்தி