ஆப்நகரம்

மூன்றாவது அணியில் கைக்கோர்க்கிறாரா கமல்?

குமாரசாமி பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ள சென்ற கமல்ஹாசன், அங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்தித்து பேசியுள்ளார்.

Samayam Tamil 23 May 2018, 9:13 pm
குமாரசாமி பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ள சென்ற கமல்ஹாசன், அங்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்தித்து பேசியுள்ளார்.
Samayam Tamil kamal-hassan-cover-pic
மூன்றாவது அணியில் கைக்கோர்க்கிறாரா கமல்?


கர்நாடகத்தின் 24வது முதலமைச்சராக இன்று மஜத கட்சியின் தலைவர் குமாரசாமி பதவியேற்றுக்கொண்டார். மேலும் துணை முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வரா பதவியேற்றார்.

பெங்களூர் விதான் சவுதான் வளாகத்தில் இந்த விழாவில், குமாரசாமியின் தந்தையும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல தமிழகத்திலிருந்து இந்த விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கர்நாடகா முதல்வர் குமாரசாமியை சந்தித்து வாழ்த்து கூறினார். பிறகு அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை கமல் சந்தித்து பேசினார்.

மிக பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் இன்று கர்நாடகத்தின் ஹெச்.டி. குமாரசாமி பதவியேற்றுக்கொண்டுள்ளார். இந்த விழாவில் கலந்துக்கொள்வதற்கு முன்னதாக தூத்துக்குடி சென்ற கமல்ஹாசன் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி