ஆப்நகரம்

அர்விந்த் கெஜ்ரிவால் பற்றி ஊழல் புகார் கூறிய கபில் மிஸ்ரா மீது தாக்குதல்!

டெல்லி: முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மீது ஊழல் புகார் கூறிய முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ராவை ஆம் ஆத்மி தொண்டர் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 10 May 2017, 7:47 pm
டெல்லி: முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் மீது ஊழல் புகார் கூறிய முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ராவை ஆம் ஆத்மி தொண்டர் ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil kapil mishra who accused arvind kejriwal of corruption attacked
அர்விந்த் கெஜ்ரிவால் பற்றி ஊழல் புகார் கூறிய கபில் மிஸ்ரா மீது தாக்குதல்!


டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி, ஆளுங்கட்சியாக செயல்பட்டு வருகிறது. எனினும், அக்கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால் மீது அண்மைக்காலமாக, ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது வழக்கமாகியுள்ளது.

இதில், வேடிக்கை என்னவென்றால், எதிர்க்கட்சித் தலைவர்கள் என்ற நிலை மாறி, தற்போது ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்களே கெஜ்ரிவால் மீது ஊழல் புகார் கூற தொடங்கிவிட்டனர்.

இதன்படி, சில நாட்கள் முன்பாக, கெஜ்ரிவால் மீது ஊழல் புகார் கூறிய குமார் விஸ்வாஸ், பெரும் பேச்சுவார்த்தைக்கு பின், ராஜஸ்தான் மாநில நிர்வாகியாக நியமிக்கப்பட்டுவிட்டார். இதையடுத்து, கட்சிக்குள் ஏற்பட்ட பூசல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகக்கூறப்பட்டது.

ஆனால், திடீரென மற்றொரு மூத்த தலைவர் கபில் மிஸ்ரா, கெஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். அவர் உடனடியாக, ஆம் ஆத்மியில் இருந்து நீக்கப்பட்டார். இதுபற்றி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த மிஸ்ரா,‘’கெஜ்ரிவால், ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதை நானே நேரடியாகப் பார்த்தேன்,’’ எனக் கூறி, பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும், கெஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி, அவர் புகார் செய்துள்ளார். இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியினர் மிஸ்ரா மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கபில் மிஸ்ரா டெல்லியில் உள்ள அவரது இல்லத்திலேயே, கெஜ்ரிவால் மீது சட்டப்படி நடவடிக்கை கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இன்று அவர் போராட்டத்தின்போது, ஏராளமான பொதுமக்கள் அங்கே கூடியிருந்தனர்.

அப்போது ஒருவர், மிஸ்ராவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறிவிட்டு, கூட்டத்தினரை கடந்துசென்று, அவரை சராமரியாக தாக்க தொடங்கினார். இதைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த மிஸ்ராவின் ஆதரவாளர்கள், அந்த நபரை குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தினர். மேலும், அவர் ஆம் ஆத்மி தொண்டர் எனத் தெரியவந்ததால், அடித்து துவைத்து, போலீசில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.

Sacked AAP minister Kapil Mishra, who is sitting on a 'satyagraha' after leveling graft charges against party chief Arvind Kejriwal, was attacked by an alleged 'AAP supporter' on Wednesday evening.

அடுத்த செய்தி