ஆப்நகரம்

கர்நாடகா: 8 எம்எல்ஏ.,க்கள் சஸ்பெண்ட்

கர்நாடகாவில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஓட்டளித்த 8 எம்எல்ஏ.,க்களை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சஸ்பெண்ட் செய்துள்ளது.

TNN 12 Jun 2016, 7:52 pm
கர்நாடகாவில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஓட்டளித்த 8 எம்எல்ஏ.,க்களை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சஸ்பெண்ட் செய்துள்ளது.
Samayam Tamil karnataka 8 mlas suspended for voting congress in rajyasabha election
கர்நாடகா: 8 எம்எல்ஏ.,க்கள் சஸ்பெண்ட்


கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநிலங்களில் விரைவில் காலியாக உள்ள ராஜ்யசபா எம்பி பதவிகளுக்காக, புதிய பிரதிநிதிகளை தேர்வு செய்யும் விதமாக, நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில், தேவ கவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ.,க்கள் சிலர், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு போட்டதாகப் புகார் எழுந்தது.

இதன்பேரில், விசாரணை மேற்கொண்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைமை, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்த, அந்த 8 எம்எல்ஏ.,க்களையும் சஸ்பெண்ட் செய்து, உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி