ஆப்நகரம்

மனைவியின் கன்னித்தன்மையை பரிசோதனை செய்த கணவர் மீது வழக்குப் பதிவு

கர்நாடகாவில் மனைவிக்கு தெரியாமல் அவருக்கு கன்னித்தன்மை இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்த கணவர் மீது மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார்.

Samayam Tamil 29 Mar 2019, 4:35 pm
கர்நாடகாவில் மனைவிக்கு தெரியாமல் அவருக்கு கன்னித்தன்மை இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்த கணவர் மீது மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார்.
Samayam Tamil scared-woman-abused-by-man-667001


வடக்கு கர்நாடகாவை சேர்ந்த ராக்‌ஷா மற்றும் ஷரத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)என்ற தம்பதி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேட்டரிமோனி இணையதளத்தில் சந்தித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ராக்‌ஷா சிறு வயதில் இருக்கும்போதே அவரது தாய் இறந்துவிட்டார். ராக்‌ஷாவின் திருணத்திற்கு பிறகு அவரது தாய் புற்றுநோயால் மரணடைந்தார். இதனால் ராக்‌ஷா மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டார். அவரது கடினமான நேரங்களில் அவரின் நண்பர்கள் அவருக்கு ஆறுதலாக இருந்தனர். அவர்களிடத்தில் ராக்‌ஷா அடிக்கடி பேசியுள்ளார்.

மேலும் தனது தாய்யின் மரணத்தால் அவர் தொடர்ந்து சாப்பிடமால் இருந்துள்ளார். இதனால் வாய்வு பிரச்சனை ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளார். இதைத் தவறாக புரிந்துகொண்ட ஷரத் , இவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். எல்லாருக்கும் செய்யப்படும் பரிசோதனை என்று கூறிவிட்டு, அவருக்கு கன்னித்தன்மை உள்ளதா என்று பரிசோதனை செய்துள்ளார். மேலும் அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என்பது தொடர்பாகவும் பரிசோதனை செய்துள்ளார். பரிசோதனை முடிந்த பிறகுதான், அவருக்கு கன்னித்தன்மை குறித்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இதனால் கோவமடைந்த அந்த பெண் ஷரத்திடம் சண்டை போட்டுவிட்டு, தனது தங்கையின் வீட்டிக்கு சென்றுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவரது கணவன் விவாகரத்து வேண்டி குடும்ப நல நீதிமன்றத்தை நாடியுள்ளார். குடும்பநல நீதிமன்றம் சார்பாக இருவருக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டபோது தன்னை மிகவும் நல்லவன்போல் காட்டிக்கொள்ள ஷரத் முயன்றுள்ளார். இதைத்தொடர்ந்து தனக்கு நடந்த கொடுமையை ராக்‌ஷா கூறியதும், குழும்ப நல நீதிமன்றம் நியமித்த ஆலோசகர்கள் ஷரத்திற்கு அறிவுரை வழங்கியுள்ளனர். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவில்லை .
இடைத்தொடர்ந்து ராக்‌ஷிகா தனது கணவன் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

அடுத்த செய்தி