ஆப்நகரம்

எனக்கும் கொரோனா வந்துடுச்சு; தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர்!

தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 3 Aug 2020, 5:28 am
இந்தியாவில் கொரோனா பாதிப்பு பலரையும் தாக்கிக் கொண்டிருக்கிறது. இதில் அரசியல் தலைவர்களும் விதிவிலக்கல்ல. அந்த வகையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் நலமுடன் இருக்கிறேன். மருத்துவர்கள் அறிவுரைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.
Samayam Tamil BS Yediyurappa


கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். கர்நாடக மாநில முதலமைச்சர் அலுவலகம் அளித்த தகவலின்படி, வாரம் ஒருமுறை முதலமைச்சருக்கு வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. முதலமைச்சர் அலுவலக ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கோவிட்-19 பரிசோதனை சுகாதாரத்துறையால் செய்யப்படுகிறது.

கொரோனாவுக்கு பலியான முதல் பெண் அமைச்சர்... முதல்வர் இரங்கல்

முதலமைச்சரின் பரிசோதனை முடிவுகள் நேற்று இரவு 10 மணிக்கு கிடைத்தது. அதில் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது வரை வைரஸ் பாதிப்பிற்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை.

கடந்த சில மாதங்களில் கர்நாடக மாநில அமைச்சர்கள் சிடி ரவி, ஆனந்த் சிங், பிசி பட்டில் ஆகியோருக்கு கோவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிற்கு அடுத்து இரண்டாவது முதலமைச்சராக எடியூரப்பாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூன்று நாட்களுக்கு பிறகு சோனியா டிஸ்சார்ஜ்!!

77 வயதான எடியூரப்பா நாட்டின் வயதான முதலமைச்சர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி