ஆப்நகரம்

அமித்ஷாவிற்கே ஆப்பு வைத்த டிகே சிவகுமார்; ரெட்டிக்கே வெயிட் காட்டும் இவர் யார் தெரியுமா?

காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் அமித்ஷாவின் திட்டத்தை 2வது முறையாக மண்ணைக் கவ்வச் செய்துள்ளார்.

Samayam Tamil 19 May 2018, 6:51 pm
பெங்களூரு: காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் அமித்ஷாவின் திட்டத்தை 2வது முறையாக மண்ணைக் கவ்வச் செய்துள்ளார்.
Samayam Tamil TK Shivakumar


கர்நாடகாவின் ஒக்கலிக சமூகத்தின் இரும்பு மனிதர் டிகே சிவகுமார். அதிகாரத் தோரணை, அதிரடியான பேச்சு, புழுதிப் பறக்கும் கார்கள் - இவை தான் சிவகுமாரின் ஸ்டைல். கடந்த ஆண்டு ராஜ்யசபா தேர்தலின் போது தான், இந்தியாவே இவரை திரும்பி பார்த்தது.

சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேலை குஜராத்தில் இருந்து ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்க காங்கிரஸ் தலைமை முடிவெடுத்தது. அப்போது அவரைத் தோற்கடிக்க அமித்ஷா திட்டம் தீட்டினார். குஜராத் எம்.எல்.ஏக்களை அகமது படேலுக்கு எதிராக தி ருப்ப பாஜக முயற்சித்தது.
இதனால் அவர்கள் கர்நாடகாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இங்கு வந்த 44 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாதுகாக்கும் பொறுப்பு டிகே சிவகுமாருக்கு வழங்கப்பட்டது. அவர்கள் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டு, அகமது படேலை வெற்றி பெறச் செய்தனர். இதன் விளைவாக சிவகுமார் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
ஆனால் எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை. இதேபோல் தற்போது காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட பாஜக முயற்சித்தது. இப்போதும் சிவகுமாரை காங்கிரஸ் தலைமை நம்பியது. ஆனால் மஜத குமாரசாமிக்கும், சிவகுமாருக்கும் ஜென்ம பகை. இருப்பினும் காங்கிரஸ் தலைமைக்காக குமாரசாமியை முதல்வராக்க ஒத்துழைத்தார்.

அனைத்து எம்.எல்.ஏக்களின் போன்களையும் வாங்கி வைத்துக் கொண்டார். தனது இரும்புக் கோட்டைக்குள் யாரையும் நுழைய விடவில்லை. வட கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்கள் போல், தென் கர்நாடகாவில் சிவகுமார் மற்றும் அவரது சகோதரரும், காங்கிரஸ் எம்.பியுமான டிகே சுரேஷும் பலம் வாய்ந்தவர்கள்.

ரெட்டி சகோதரர்களைப் போல் பணத்தாலும், படை பலத்தாலும் எதிர்க்கக் கூடிய ஒரே காங்கிரஸ் தலைவர் சிவகுமார். கடந்த 2006ஆம் ஆண்டு, மகாராஷ்டிராவில் விலாஷ் ராவ் தேஷ்முக் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட போதும், சிவகுமார் தான் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாதுகாத்தார்.
காங்கிரஸ் தலைமையின் ஆதரவு தொடர்ந்து இருப்பதால், குவாரி, ரியல் எஸ்டேட் என கொடி கட்டி பறக்கிறார். அமித்ஷா, ரெட்டி சகோதரர்கள் திட்டத்தை மண்ணைக் கவ்வச் செய்து, எடியூரப்பா பதவி விலக காரணமாக அமைந்தார்.

ஏராளமான தொழில்கள் செய்து வந்தாலும், எந்த ரெய்டுக்கு அஞ்சாமல் தைரியமாக இருக்கிறார். டெல்லியில் இருந்து வரும் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல், தென்னிந்தியாவில் கெத்துடன் இருக்கும் சிவகுமாரிடம் மற்ற தலைவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

Karnataka Congress leader DK Shivakumar beats Amit Shah second time.

அடுத்த செய்தி