ஆப்நகரம்

கர்நாடகா தேர்தல் - டைம்ஸ் நவ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு - வெற்றி பெறப்போவது யார்?

கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் இன்று நடைப்பெற்றது. தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Samayam Tamil 12 May 2018, 7:17 pm
பெங்களூரு : கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் இன்று நடைப்பெற்றது. தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
Samayam Tamil karnataka-exit-polls-lead


கர்நாடகாவில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார் என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் ஆட்சி பிடிப்பது மூன்றாவது அணியின் கையில் உள்ளதை தெளிவாக தெரியவந்துள்ளது.

டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு:
காங்கிரஸ் முதலிடம் :
டைம்ஸ் நவ் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் 90-103 இடங்களும், பாஜக 80 -93 இடங்களும், ஜனதா தளம் (மதச்சார்பற்ற) 31-39 இடங்களை பிடிக்கும் என முடிவுகள் வெளியிட்டுள்ளன.

ஆக்ஸிஸ் மை இந்தியா :
காங்கிரஸ் 11இடங்கள்
பாஜக 85 இடங்கள்
ஜனதா தளம் 26 இடங்கள்

சி-ஓட்டர்ஸ்:

காங்கிரஸ் 93இடங்கள்
பாஜக 103 இடங்கள்
ஜனதா தளம் 25 இடங்கள்
மற்றவை 1 இடம்

இந்தியா டுடே கருத்துக் கணிப்பு:
கர்நாடக தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் 106-118 இடங்களை பிடிக்கும்

பாஜக 79 முதல் 92 இடங்களை பிடிக்க வாய்ப்பு
மற்றவை 1-4 இடங்கள் பிடிக்க வாய்ப்புள்ளதாக இந்தியா டுடே செய்தி சேனல் வெளியிட்டுள்ளது.

நியூஸ் எக்ஸ் கருத்துக் கணிப்பு:
காங்கிரஸ் 72- 78 இடங்கள்
பாஜக 102 - 110 இடங்கள்
மற்றவை 35 - 39 இடங்கள் பிடிக்கும் என தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் ஜனதா தளம் (மதசார்பற்ற) கட்சி எந்த கட்சியுடன் சேரப்போகிறதோ, அந்த கட்சி தான் கர்நாடகாவை ஆளப்போகும் உரிமையைப் பெறும் என தெளிவாக தெரிகிறது.

அடுத்த செய்தி