ஆப்நகரம்

கொரோனா சிகிச்சை: இதை தானம் செஞ்சா கவர்மென்ட் 5,000 ரூபாய் தருமாம்!!

கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக தங்களது பிளாஸ்மாவை தானம் செய்வோருக்கு தலா 5,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 15 Jul 2020, 8:12 pm
கொரோனா நோய்த்தொற்றை குணப்படுத்த இதுவரை தனியாக மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக, கொரோனா நோயாளிகளுக்கு கூட்டு மருந்து சிகிச்சையே அளிக்கப்பட்டு வருகிறது.
Samayam Tamil plasma


இந்த சிகிச்சைக்கு நல்ல பலன் இருந்தாலும், இதைவிட பிளாஸ்மா சிகிச்சை சிறந்த பலனை தந்து வருவது மருத்துவரீதியாக நிரூபணமாகி வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, தங்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை தானம் செய்வோருக்கு அரசு 5,000 ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கும் என்று கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

"அசிங்கமா போச்சே குமாரு" கதையாகி போன சச்சின் பைலட் ஆதரவாளர்களின் நிலை!!

கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சைக்குப் பின் குணமடைவோருக்கு அவர்களின் உடம்பில் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் எனவும், ரத்தத்தின் பகுதிப் பொருள்களில் ஒன்றான பிளாஸ்மாவில் இந்த எதிர்ப்பு சக்தி இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் பிளாஸ்மாவை, நோய்த்தொற்று ஆளான மற்றொருவருக்கு செலுத்தி அவரையும் குணப்படுத்தும் சிகிச்சை முறை பிளாஸ்மாதெரபி எனப்படுகிறது.

கொரோனா நோய்த்தொற்று அதிகம் உள்ள டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில், பிளாஸ்மாதெரபி சிகிச்சையை மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன. இந்த நிலையில், கர்நாடக மாநில அரசு இவ்வாறு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி