ஆப்நகரம்

புத்தாண்டு 2021 கொண்டாட்டம்: தடை உத்தரவில் திடீர் மாற்றம் - பொதுமக்கள் உஷார்!

இரவு நேர தடை உத்தரவில் மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 31 Dec 2020, 2:31 pm
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. இந்த சூழலில் புதிய வைரஸ் தொடர்பான அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 1,766 பேர் இங்கிலாந்தில் இருந்து கர்நாடகாவிற்கு வருகை புரிந்துள்ளனர். அதில் 27 பேருக்கு வைரஸ் தொற்று இருக்கிறது. இந்த சூழலில் பெங்களூரு நகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் டிசம்பர் 31ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஜனவரி ஒன்றாம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
Samayam Tamil New Year Curfew in Bangalore


இந்த உத்தரவில் மாநில அரசு திடீர் மாற்றம் செய்துள்ளது. அதன்படி, டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் ஜனவரி ஒன்றாம் தேதி காலை 6 மணி வரை 144 தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய பெங்களூரு மாநகர காவல் ஆணையர் கமல் பந்த், கொரோனா பாதிப்பு மற்றும் புதிய வைரஸ் தொற்று ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பெங்களூரு நகர் முழுவதும் தீவிர சுகாதாரக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

கட்சியில் சேர்ந்த சில மணி நேரத்தில் நீக்கம்; அதிர்ச்சியூட்டிய பாஜக - ஏன்?
மேலும் புத்தாண்டு தினத்தை ஒட்டி கொண்டாட்டங்களில் பொதுமக்கள் ஈடுபடவுள்ளதால், அதற்குள் உரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எம்.ஜி ரோடு, சர்ச் ஸ்ட்ரீட், பிரிகேட் ரோடு, கோரமங்களா, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு அனுமதி இல்லை.

பப்கள், பார்கள், உணவகங்களில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தங்கள் குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடலாம். ஆனால் மால்கள், பப்கள், உணவகங்கள், க்ளப் ஹவுஸ்களில் மியூசிக்கல் நைட்ஸ், ஷோஸ் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்தார்.

பெத்த மகளையே கேவலப்படுத்துற: ஷிவானி அம்மாவை விளாசிய சின்மயி
இந்நிலையில் பொது இடங்களில் மிகப்பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்படுவதாக கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

அடுத்த செய்தி