ஆப்நகரம்

நித்யானந்தா எங்கே இருக்கிறார்? போலீசாருக்கு உயர் நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு!

தலைமறைவாக இருக்கும் சாமியார் நித்யானந்தாவை விரைவாக கண்டுபிடித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் காலக்கெடு உடன் கூடிய முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 13 Dec 2019, 9:52 am
எப்போதும் சர்ச்சைகளுக்கு குறையாமல் இருப்பவர் சாமியார் நித்யானந்தா. நடிகை ரஞ்சிதா வீடியோ தொடங்கி ஜனார்த்தன ஷர்மா புகார் வரை ஒரு நீண்ட புகார் பட்டியலே இருக்கிறது.
Samayam Tamil Nithyananda New


இந்த சூழலில் ஹைதி தீவிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அங்கு தனித்தீவு ஒன்றை வாங்கி அதற்கு “கைலாசா” என்று பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கென தனி இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு நாட்டிற்கு தேவையான அத்தனை அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. கல்வி, சுகாதாரம், குடியுரிமை வசதி, நிர்வாகம் என்ற பல்வேறு விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

காற்று மாசை ஓட, ஓட விரட்டும் கனமழை; தலைநகரில் வெப்பம் தணிந்ததால் மகிழ்ச்சி!

இந்த தீவு எங்கிருக்கிறது என்று போலீசார் முதல் சாமானிய மனிதர்கள் வரை தேடி வருகின்றனர். ஆனால் யாருக்கும் விடை கிடைத்தபாடில்லை. இந்த சூழலில் நித்யானந்தாவின் சர்ச்சை வீடியோ காட்சிகளை வெளியிட்ட லெனின் கருப்பன் என்பவர், பெங்களூரு ராம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார்.

இதன் விசாரணையின் போது நேரில் ஆஜராவதில் இருந்து நித்யானந்தா விலக்கு பெற்றார். இதனை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தை லெனின் கருப்பன் நாடினார். அதாவது, ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணை சரிவர நடைபெறுவது இல்லை என்றும், நித்யானந்தா எங்கிருக்கிறார் என தெரியவில்லை என்றும் மனுதாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள், நித்யானந்தா இருக்கும் இடத்தை கண்டறிந்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று பெங்களூரு போலீசாருக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா... போராட்டம்... மூன்று பேர் பலி

அப்போது வரும் 18ஆம் தேதிக்குள் நித்யானந்தா இருக்கும் இடத்தை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர் . ஒருவேளை நித்யானந்தாவை கண்டுபிடித்து அறிக்கை தாக்கல் செய்யவில்லை எனில், நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்தனர்.

இதற்கிடையில் ஜனார்த்தன ஷர்மா தனது இரு மகள்களை நித்யானந்தாவிடம் இருந்து மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றத்தில் தொடரபட்ட வழக்கு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

அதாவது அவர்கள் இருவரும் மேற்கு இந்திய தீவுகள் அல்லது அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து காணொலி மூலம் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஸ்கூல் பசங்களுக்கு ஹேப்பி நியூஸ்... டிசம்பர் 22 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!!

ஆனால் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணை வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி