ஆப்நகரம்

உச்சநீதிமன்றம் சென்ற கர்நாடக அரசியல் சிக்கல்- சபாநாயகர் மீது அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வழக்கு!

கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பம் தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்காக தொடரப்பட்டு உள்ளதால், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 10 Jul 2019, 11:05 am
கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 13 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஆனால் அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கவில்லை.
Samayam Tamil SC


இதையடுத்து 10 அதிருப்தி எம்.எல்.ஏக்கள், மும்பை ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் டி.கே.சிவகுமாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மும்பையில் அனல்பறக்கும் கர்நாடக அரசியல்; ஆட்டம் காட்டும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்!

அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தங்கள் விஷயத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அதாவது, ராஜினாமா செய்த கர்நாடகா மஜத - காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 10 பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில், ராஜினாமா கடிதம் மீது எந்த முடிவும் எடுக்கவில்லை. சபாநாயகர் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார். அரசியலமைப்பு சட்டப்படி சபாநாயகர் தனது கடமையை செய்யவில்லை.

13 எம்.எல்.ஏக்களும் கோவா போகலையா! அப்போ எங்க இருக்காங்க? கர்நாடக அரசியலில் பரபரப்பு!

தங்கள் மனுவை இன்றே விசாரிக்க வேண்டும் என்று அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரப்பட்ட நிலையில், நாளை விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில் கர்நாடகாவில் நிலவி வரும் அரசியல் சிக்கல் குறித்து, மக்களவையில் விவாதிக்க திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

அடுத்த செய்தி