ஆப்நகரம்

லவ் ஜிகாத்தை தடுக்க சட்டம்: பாஜக அமைச்சர் பரபரப்பு தகவல்!

திருமணத்துக்காக மதம் மாறுவதைத் தடுக்க சட்டம் இயற்றப்படும் என்று கர்நாடக மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும், பாஜக தேசிய பொதுச்செயலாளருமான சி.டி.ரவி தெரிவித்துள்ளார்

Samayam Tamil 3 Nov 2020, 6:30 pm
கடந்த ஜூலை மாதம் முஸ்லிம் மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறிய பெண் ஒருவர், இந்து ஆண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, தங்களுக்கு பாதுகாப்பு கோரி இருவரும் உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர் நீதிமன்றம், திருமணம் செய்வதற்காக மட்டுமே மதம் மாறுவதை ஏற்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
Samayam Tamil சி.டி.ரவி
சி.டி.ரவி


இந்த நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை சுட்டிக் காட்டி, கர்நாடகாவில் திருமணத்துக்காக மதம் மாறுவதைத் தடுக்க சட்டம் இயற்றப்படும் என்று அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும், பாஜக தேசிய பொதுச்செயலாளருமான சி.டி.ரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், எங்களது சகோதரிகளின் மாண்பை குலைக்கும் வகையில் ஜிகாதிகள் செயல்பட்டால் அதைப் பார்த்துக் கொண்டு அரசு மவுனமாக இருக்காது. யாரேனும் இதுபோன்ற மதம்மாற்றத்தில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை விரைவில் வழங்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் கொண்டு வரப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக்காட்டி தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய யோகி ஆதித்யநாத், “எங்கள் சகோதரிகளுக்கும், பெண்களுக்கும் இடையூறு விளைவிப்போருக்கு இறுதி ஊர்வலம் நடத்த வேண்டியது இருக்கும். மாநிலத்தில் லவ் ஜிகாத்தை தடுக்க விரைவில் கடுமையாக சட்டம் கொண்டுவரப்படும்” என்றார்.

பீகாரில் களைகட்டும் தேர்தல் திருவிழா: வாக்குப் பதிவு தீவிரம்!

அவரது இந்த அறிவிப்பையடுத்து, மத்தியப் பிரதேச மாநில அரசும், ஹரியாணா மாநில அரசும் இதேபோன்று சட்டம் இயற்றப்போவதாக தெரிவித்த நிலையில், தற்போது கர்நாடக மாநில அமைச்சரும் திருமணத்துக்காக மதம் மாறுவதைத் தடுக்க சட்டம் இயற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி