ஆப்நகரம்

INX Media Case: கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்படும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஜூலை 31 வரை வெளிநாடுகளுக்குப் பயணிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Samayam Tamil 23 Jul 2018, 2:27 pm
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்படும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஜூலை 31 வரை வெளிநாடுகளுக்குப் பயணிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Samayam Tamil s320-750x506


கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டிலிருந்து முதலீடுகளைப் பெறுவதற்காக அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்திடம் (FIPB) சட்ட விரோதமாக அனுமதி பெற்றது.

இதற்கு கார்த்தி சிதம்பரம் தன் தந்தை ப.சிதம்பரம் மூலம் அனுமதி பெற்றுத் தந்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதற்காக அந்த நிறுவனம் கொடுத்த லஞ்சப் பணத்தை கார்த்தி சிதம்பரம் வாங்கியுள்ளார் என்றும் அந்த நிறுவனத்தையே அவர் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்குச் செல்ல தடை விதிக்கும் விதமாக அவருக்கு உச்சநீதிமன்றம் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது.

இந்நிலையில், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கார்த்தி சிதம்பரம். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், ஜூலை 23ஆம் தேதி (இன்று) முதல் 31ஆம் தேதி வரை அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு வியாபார ரீதியான பயணம் செய்ய கார்த்தி சிதம்பரத்துக்கு அனுமதி வழங்குவதாக அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி