ஆப்நகரம்

கருணாநிதி மறைவு: நாளை தேசிய துக்க தினம் மத்திய அரசு அறிவிப்பு

கருணாநிதி மறைவையொட்டி மத்திய அரசு ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் நாடு முழுவதும் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 7 Aug 2018, 10:17 pm
கருணாநிதி மறைவையொட்டி மத்திய அரசு ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் நாடு முழுவதும் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Samayam Tamil 65227146
கருணாநிதி மறைவு: மத்தியரசு ஒருநாள் துக்கம் அனுசரிக்க முடிவு


சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.

அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பு மக்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், கருணாநிதி உடலை மெரினா மருத்துவமனையில் நல்லடக்கம் செய்ய கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில் கருணாநிதி மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்தியரசு தெரிவித்துள்ளது. தவிர, நாடு முழுவதும் தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கிவிடவும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை நடைபெறவிருந்த மத்திய அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி மறைவிற்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் கர்நாடகாவில் நாளை ஒருநாள் விடுமுறை அறிவித்து அம்மாநில முதலமைச்சர் ஹெ.டி. குமாரசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அடுத்த செய்தி