ஆப்நகரம்

காஷ்மீரில் தொடரும் வன்முறை: பலி எண்ணிக்கை 78 ஆக உயர்வு

காஷ்மீரில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78ஆக உயர்ந்துள்ளது.

TNN 14 Sep 2016, 6:06 am
ஸ்ரீநகர்: காஷ்மீரில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78ஆக உயர்ந்துள்ளது.
Samayam Tamil kashmir protest dead poll increases upto 78
காஷ்மீரில் தொடரும் வன்முறை: பலி எண்ணிக்கை 78 ஆக உயர்வு


ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 8ம் தேதி, ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி புர்ஹான் வானி உட்பட 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து காஷ்மீரின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கின் 10 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் கல்வி நிறுவனங்கள், போக்குவரத்து, வர்த்தகம் ஆகியவை அடியோடி பாதிக்கப்பட்டன. தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. பெல்லட் குண்டுகளால் ஆயிரக்கணக்கானோரின் கண்பார்வை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் பந்திபோரா நகரில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், பெல்லட் துப்பாக்கிகளால் சுட்டும் வன்முறையில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். இதில் 20 வயது மொர்தசா அகமது என்பவர் பலியானார். இதேபோல் சோபியான் மாவட்டத்தில் நடைபெற்ற மோதலில் மோதலில் ஷாகித் அகமது என்பவர் உயிரிழந்தார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 78ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி