ஆப்நகரம்

காஷ்மீா் காவல் துறையினருக்கு குண்டு துளைக்காத வாகனம் – உள்துறை அமைச்சா்

தீவிரவாதிகளின் தாக்குதலை சமாளிக்க காஷ்மீர் காவல் துறையினருக்கு குண்டு துளைக்காத வாகனம் வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் ராஜ்நாத்சிங் அறிவித்துள்ளார்.

TOI Contributor 10 Sep 2017, 7:52 pm
தீவிரவாதிகளின் தாக்குதலை சமாளிக்க காஷ்மீர் காவல் துறையினருக்கு குண்டு துளைக்காத வாகனம் வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் ராஜ்நாத்சிங் அறிவித்துள்ளார்.
Samayam Tamil kashmiri police have not bombed the vehicle
காஷ்மீா் காவல் துறையினருக்கு குண்டு துளைக்காத வாகனம் – உள்துறை அமைச்சா்


ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த் நாக் மாவட்டம் அச்பில் பகுதியில் கடந்த ஜூன் மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை வாகனத்தில் சென்ற காவல் துறையினா் 6 போ் பலியாகினா்.

இதனைதொடர்ந்து காவல்துறையினர் செல்ல குண்டு துளைக்காத வாகனம் வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்து இருந்தனர். ஆனால் அவர்களுக்கு குண்டு துளைக்காத வாகனம் ஒதுக்கப்படவில்லை.

இந்த நிலையில் காஷ்மீர் காவல் துறையினருக்கு குண்டு துளைக்காத வாகனங்கள் வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் ராஜ்நாத்சிங் அறிவித்துள்ளார். 4 நாள் பயணமாக அவர் இன்று காஷ்மீர் சென்றார். காவல்துறையினருடன் நடந்த உரையாடலின் போது அவர் இதை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராஜ்நாத்சிங் கூறியதாவது:-

காஷ்மீர் காவலர்கள் மிகப்பெரிய தியாகங்களை செய்து ஒட்டுமொத்த காவல் துறைக்கும் பெருமை சேர்த்துள்ளனர். உங்களது பணி சவாலானது. உயிர் தியாகம் செய்தவர்களை பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை. பிரதமரும் உங்களை பாராட்டி வருகிறார். காவல் துறைக்கு குண்டு துளைக்காத வாகனங்கள் வாங்கப்படும். இதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது

இதேபோன்று நமது பாதுகாப்பு படை வீரர்களுக்கும் குண்டு துளைக்காத உடையும் வழங்கப்படும். இதற்காகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தொிவித்துள்ளார்.

அடுத்த செய்தி