ஆப்நகரம்

மோடி அரசின் ஈகோ: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லி மெட்ரோ ரயில் கட்டண உயர்வு மத்திய அரசின் காழ்புணர்ச்சியால் எடுக்கப்பட்ட முடிவு என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 22 Mar 2018, 6:29 am
டெல்லி மெட்ரோ ரயில் கட்டண உயர்வு மத்திய அரசின் காழ்புணர்ச்சியால் எடுக்கப்பட்ட முடிவு என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil New Delhi: Delhi Chief Minister Arvind Kejriwal during a Prize distribution fun...


டெல்லி மெட்ரோ ரயில் பயணக் கட்டணம் கடந்த ஆண்டு அக்டோபரில் ரூ.10 வரை உயர்ந்தப்பட்டது. இதற்கு அம்மாநில அரசு கண்டனம் தெரிவித்தது. ஆனால், அதற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.

தொடர்ந்து மெட்ரோவில் பயணிகள் எண்ணிக்கை குறைவதையடுத்து கடந்த வாரம் டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கட்டண உயர்வைத் திரும்ப பெறுவது பற்றி மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரியிடம் பேசினார். ஆனால், இதில் எந்த பலனும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், டெல்லி மெட்ரோ ரயில் கட்டண உயர்வு மத்திய அரசின் காழ்புணர்ச்சியால் எடுக்கப்பட்ட முடிவுதான் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

அடுத்த செய்தி