ஆப்நகரம்

ஐஐடியில் முறைகேடாக சேர்ந்த கெஜ்ரிவால் - சுப்பிரமணியன் சுவாமி

ஐஐடி காரக்பூரில் தனது தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி தான் அர்விந்த் கெஜ்ரிவால் படிக்க வாய்ப்பை பெற்றார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இது மீண்டும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

TNN 26 Jun 2016, 3:43 pm
திருவனந்தபுரம்: ஐஐடி காரக்பூரில் தனது தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி தான் அர்விந்த் கெஜ்ரிவால் படிக்க வாய்ப்பை பெற்றார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இது மீண்டும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
Samayam Tamil kejriwal didnt crack iit jee subramaniyan swamy
ஐஐடியில் முறைகேடாக சேர்ந்த கெஜ்ரிவால் - சுப்பிரமணியன் சுவாமி


பாஜக மூத்த தலைவர் சுப்பிமணியன் சுவாமி சர்ச்சைகளில் சிக்காத நாளே இல்லை என்று தான் கூற வேண்டும். சமீபத்தில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை தாக்கி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சுவாமி, கம்யூனிஸ்ட்கள் தான் கட்சியின் சக உறுப்பினர்களை தாக்கி பேசுவர் என்றும், தனக்கு அதுபோன்ற எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் முறைகேடாகத் தான், ஐஐடி காரக்பூரில் படிக்கும் வாய்ப்பை பெற்றார் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடி காரக்பூரில் 1952 முதல் 2005ம் ஆண்டு வரை நிர்வாகத்தின் முறைகேடாக செயலால் மட்டுமே மாணவர்கள் இடங்கள் நிரப்பப்பட்டதாக குறிப்பிட்டார்.

கெஜ்ரிவால் தந்தை ஜிண்டால் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றியதாகவும், அவர் மூலமாகவே ஐஐடியில் படிக்க இடத்தைப் பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அடுத்த செய்தி