ஆப்நகரம்

எல்லை மீறிய கெஜ்ரிவால்: தவறான பதிவால் தலைகுனிவு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட தவறான பதிவு அவரை தலைகுனிவுக்கு ஆளாக்கியுள்ளது.

TNN 21 Nov 2016, 6:24 pm
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட தவறான பதிவு அவரை தலைகுனிவுக்கு ஆளாக்கியுள்ளது.
Samayam Tamil kejriwal tweets an image of dead thief as an innocent died standing in bank queue
எல்லை மீறிய கெஜ்ரிவால்: தவறான பதிவால் தலைகுனிவு


பிரதமர் நரேந்திர மோடியின் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை பற்றி தொடர்ந்து விமர்சித்து வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தவறான ட்விட்டர் பதிவை வெளியிட்டு அவமானத்திற்கு ஆளாகியுள்ளார்.

கெஜ்ரிவாலின் நண்பர் அபிஷேக் மிஸ்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், புதிய ரூபாய் நோட்டு எடுப்பதற்காக காத்திருந்த ஒருவர் பணம் கிடைக்காமல் போனதால், மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டதாக ஒரு பதிவை எழுதியுள்ளார். அத்துடன் ஒருவர் தூக்கிட்டுத் தொங்குவது போன்ற படத்தையும் இணைத்துள்ளார்.



அபிஷேக் வெளியிட்ட பதிவைப் பார்த்த கெஜ்ரிவால், உடனே அதனை தானும் பதிவிட்டு தனது கண்டனத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆனால், அந்த படத்தில் தூக்கிட்டு தொங்கும் நபர், சனிக்கிழமையன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு வங்கியில் கொள்ளையடிக்க முயற்சித்திருக்கிறார். அப்போது காவல்துறையினர் அவரை சுற்றிவளைத்துவிட்டதால், அந்த வங்கியிலேயே தூக்கிட்டு இறந்திருக்கிறார்.

இதனை அறியாத டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சிறிதும் யோசனை இல்லாமல், நண்பரின் தவறான தகவலை தானும் பதிவிட்டுள்ளார். பொறுப்பற்ற இந்த செயலால் தற்போது கெஜ்ரிவாலுக்கு எதிராக கடுமையான கண்டனங்கள் வரத்தொடங்கியுள்ளன.



மத்திய அரசை குற்றம்சாட்டுவதற்காக எதையும் தீர விசாரிக்காமல், பேசுவதா? என்றும் முதல்வர் பதிவில் இருக்கும் ஒருவர் இதுபோன்ற சிறுமையான செயல்களைச் செய்வது அவரைத் அந்த பதவிக்குத் தேர்வுசெய்த மக்களை இழிவுபடுத்துவதாகும் என்றும் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

English Summary:

Delhi chief minister Arvind Kejriwal has been making some major Twitter errors lately by retweeting unverified information and then deleting it without a clarification.

அடுத்த செய்தி