ஆப்நகரம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வின்போது கழிவறைக்கு செல்ல மாணவருக்கு அனுமதி மறுப்பு!

கேரளாவில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின்போது கழிவறைக்கு செல்ல மாணவருக்கு அனுமதி வழங்காததால், தேர்வு அறையிலே இயற்கை உபாதையை கழித்த சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து கழிப்பறைக்கு செல்ல அனுமதி வழங்காத தேர்வு கண்காணிப்பாளர், மீது கேரள அரசின் குழந்தைகள் நல அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

Samayam Tamil 22 Mar 2019, 11:17 am
கேரளாவில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின்போது கழிவறைக்கு செல்ல மாணவருக்கு அனுமதி வழங்காததால், தேர்வு அறையிலே இயற்கை உபாதையை கழித்த சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து கழிப்பறைக்கு செல்ல அனுமதி வழங்காத தேர்வு கண்காணிப்பாளர், மீது கேரள அரசின் குழந்தைகள் நல அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
Samayam Tamil Defence-Exams-to-Join-Indian-Armed-Forces-2017

கேரளாவில் உள்ள கொல்லம் என்ற இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 10ம் வகுப்பு வேதியியல் பொதுத்தேர்வு சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இந்த தேர்வு எழுதிய 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தனக்கு வயிற்று வலிப்பதால் கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என்று தேர்வு கண்காணிப்பாளரிடம் அனுமதிகேட்டுள்ளார். ஆனால் அவர் அனுமதி வழங்கவில்லை .

கடும் வயிற்று வலியால் துடித்த அந்த மாணவர் தேர்வறையிலே இயற்கை உபாதையை கழுத்துவிட்டார். இதனால் அவரால் சரியாக தேர்வு எழுத முடியாமல் போனது. இந்த சம்பவம் தொடர்பாக தேர்வு கண்காணிப்பாளர் தலைமை கண்கானிப்பாளரிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் இது தொடர்பாக பெற்றோரிடம் அந்த மாணவர் முதலில் எதுவும் கூறவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக பின்பு அறிந்து கொண்ட மாணவரின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் 10ம் வகுப்பு தேர்வுகள் முடிந்த பிறகு இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை நடத்துமாறு மாணவரிடன் பெற்றோர் கேட்டுக்கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கேரள அரசின் குழந்தைகள் நல அமைப்பு தேர்வு கண்காணிப்பாளருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது. குழந்தை நல அமைப்பின் தலைவர் பி சுரேஷ் இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அடுத்த செய்தி