ஆப்நகரம்

கலக்கும் கேரளா: இன்னொரு தலித் அர்ச்சகர் நியமனம்

கேரளாவில் கொச்சி தேவசம் போர்டு தலித் ஒருவரை அர்ச்சகராக நியமித்துள்ளது.

TNN 2 Nov 2017, 9:47 pm
கேரளாவில் கொச்சி தேவசம் போர்டு தலித் ஒருவரை அர்ச்சகராக நியமித்துள்ளது.
Samayam Tamil kerala appoints another dalit priest
கலக்கும் கேரளா: இன்னொரு தலித் அர்ச்சகர் நியமனம்


கேரள மாநிலம் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலித் சமூகத்தைச் சேர்ந்த யது கிருஷ்ணா என்பவரை அர்ச்சகராக நியமித்தது. இதற்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்தன.

இதன் எதிரொலியாக, மற்றொரு தலித் கேரள கோயிலில் அர்ச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சலிகுளம் மகாதேவர் கோவிலில், தலித் அர்ச்சகராக உமேஷ் கிருஷ்ணன் என்பவரை கொச்சி தேவசம் போர்டு நியமித்துள்ளது.

இது குறித்து பேசிய உமேஷ், 'கடவுளின் ஆசியாலும் என் குருக்களின் ஆசியாலும் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி