ஆப்நகரம்

பறிபோன 55 உயிர்கள், 7 நாட்கள் கழித்து ராஜமலை சென்ற கேரள முதல்வர்!

கேரளா நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் நேரில் சென்று பார்வையிட்டார்.

Samayam Tamil 13 Aug 2020, 8:39 pm
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 55 பேர் பலியாகியுள்ளனர். கொட்டும் கனமழைக்கு நடுவே மீட்பு பணியினர் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மேலும் 17 பேர் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil pinarayi vijayan


ராஜமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மீட்பு பணிகளை முதன்முறை இன்று நேரில் பார்வையிட்டார். அவருடன் ஆளுநர் ஆரிப் முகமது கான் வந்திருந்தார். சுமார் 82 பேர் வசித்து வந்த அந்த இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 55 பேர்களது உடல்கள் ஒவ்வொன்றாக இதுவரை எடுக்கப்பட்டுள்ளன.

மழை நீரும், கண்ணீருமாய் மூண்டுள்ளது ராஜமலை. இன்னும் எத்தனை பேரது உடல்கள் எடுக்கப்படும் என்று தெரியாது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் இழப்பீடை அறிவித்திருந்த பினராயி விஜயன், கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மட்டும் 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக அறிவித்துள்ளார்.

இழப்பு நிதி வழங்குவதில் தமிழர்களுக்கு பாகுபாடு காட்டுவதாக பினராயி விஜயன் மீது சீமான் போன்ற தமிழக கட்சி தலைவர்கள் மட்டுமின்று கேரள எதிர்கட்சியினரும் விமர்சனங்களை எழுப்பினர். ஆனால், அதற்க்கு பதிலளித்த பினராயி, இது முதற்கட்ட நிதி மட்டும்தான் என கூறினார். மேலும், ராஜமலையில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்துக்கு, வீடு கட்டி தருவதாக கண்ணன் தேவன் ஹில் பிளான்டேஷன் லிமிடெட் உறுதியளித்துள்ளது.

கோழிக்கறியில் கொரோனா... புலம்பும் சீனா!

உயிரிழந்த அனைவரும் இந்த நிறுவனத்தில்தான் வேலை பார்த்து வந்துள்ளனர். முதற்கட்ட இழப்பு நிதியை அறிவித்துள்ள பினராயி விஜயன் இத்தனை தாமதமாக மீட்பு பணிகளை நேரில் வந்து பார்ப்பதை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த முதல்வர், இழப்பீடையோ அல்லது சில தொகுப்புகளை வழங்குவர் என எதிர்பார்த்தோம் ஆனால், வெறும் பார்வையாளராக மட்டும் வந்து செல்வது ஏமாற்றத்தை அளிப்பதாக இடுக்கி பாராளுமன்ற உறுப்பினர் டீன் குரியகோஸ் கூறினார்.

அடுத்த செய்தி