ஆப்நகரம்

பம்பரமாக சுழன்று மக்களை சந்திக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, 70 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தொடர்ந்து சந்தித்து வருகிறார்.

Samayam Tamil 11 Aug 2018, 4:59 pm
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, 70 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தொடர்ந்து சந்தித்து வருகிறார்.
Samayam Tamil DkT3Hs-VsAAVhk3
பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று சந்திக்கும் கேரள முதல்வர்


கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் அம்மாநில முதல்வா் பினராயி விஜயன், எதிா்க்கட்சித் தலைவா் ரமேஷ் சென்னிதலா ஆகியோா் ஒன்றாக சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனா்.

குறிப்பாக முதல்வர் பினராயி விஜயன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும், அங்கு வசிக்கும் மக்களையும் நேரில் சந்தித்து வருகிறார். இதுவரை சுமார் 15-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சந்தித்துள்ளதாக தெரிகிறது.

விரைவில் அவர் மற்ற குடியிருப்பு பகுதிகளுக்கும், அங்குள்ள மக்களையும் சந்தித்து பேசவுள்ளார். தவிர, முதல்வர் பினராயி விஜயன் இன்று கொச்சி நகரில் தங்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவவும் பொதுமக்கள் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கலாம் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வண்ணம் கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பொருள்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அடுத்த செய்தி