ஆப்நகரம்

கேரள மக்கள் சாப்பிட வேண்டிதை டெல்லி நிர்ணயிப்பதா? கடுப்பான பினராயி விஜயன்

கேரள மக்கள் சாப்பிட வேண்டிதை டெல்லி நிர்ணயிப்பதா? என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.

TNN 29 May 2017, 2:14 pm
திருவனந்தபுரம்: கேரள மக்கள் சாப்பிட வேண்டிதை டெல்லி நிர்ணயிப்பதா? என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil kerala cm pinarayi vijayan condemns the beef ban act from central govt
கேரள மக்கள் சாப்பிட வேண்டிதை டெல்லி நிர்ணயிப்பதா? கடுப்பான பினராயி விஜயன்


இறைச்சிக்காக மாடுகளை விற்கக்கூடாது என்று மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. கேரளாவில் மாட்டுக்கறி திருவிழா நடத்தி, மத்திய அரசின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து பதிலளித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், உணவு விஷயத்தில் டெல்லியில் உள்ளவர்கள் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.

மக்கள் சாப்பிட வேண்டிய உணவை அரசு எவ்வாறு தீர்மானிப்பது என்று கேள்வி எழுப்பியுள்ளார். உணவு விஷயத்தில் டெல்லியில் இருந்தும், நாக்பூரில் இருந்து அறிவுரை தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். கேரள மக்கள் இயல்பாகவே ஆரோக்கியமான உணவை உட்கொள்வதாக பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

Kerala CM Pinarayi Vijayan condemns the beef ban act from Central Govt.

அடுத்த செய்தி