ஆப்நகரம்

மேலாண்மை பொன்னு சாமியின் இறப்பு முற்போக்குவாதிகளுக்கு போிழப்பு – கேரள முதல்வா்

எழுத்தாளா் மேலாண்மை பொன்னுசாமியின் இழப்பு நாட்டின் முற்போக்கு இயக்கங்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் போிழப்பு என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் கருத்து தொிவித்துள்ளாா்.

TOI Contributor 31 Oct 2017, 9:36 pm
எழுத்தாளா் மேலாண்மை பொன்னுசாமியின் இழப்பு நாட்டின் முற்போக்கு இயக்கங்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் போிழப்பு என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் கருத்து தொிவித்துள்ளாா்.
Samayam Tamil kerala cm pinarayi vijayan condolences to writer melanmai ponnusamy demise
மேலாண்மை பொன்னு சாமியின் இறப்பு முற்போக்குவாதிகளுக்கு போிழப்பு – கேரள முதல்வா்

பிரபல எழுத்தாளரான மேலாண்மை பொன்னுச்சாமி, நேற்று காலை உயிாிழந்தார். 2007-ம் ஆண்டில் சாகித்திய அகாடமி விருது வென்ற இவரது மறைவு, இலக்கிய உலகில் பெரும் இழப்பாகப் பார்க்கப்படுகிறது. இவா் சாகித்திய அகாடமி உள்பட மேலும் பல விருதுகளை வென்றுள்ளார். இலக்கிய உலகில் மிகமுக்கியமான நபா்களுள் ஒருவராக விளங்கிய பொன்னுசாமி, தனது வாழ்வை மார்க்சிஸ்ட் கட்சியோடு இணைத்துக் கொண்டு வாழ்ந்தார். இந்தநிலையில், அவரது இறப்புக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான அவருடைய டுவிட்டர் பதிவில், 'தமிழ் மொழியின் முக்கியமான எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். சாகித்திய அகாடமி விருதுவென்ற மேலாண்மை பொன்னுசாமி, இலக்கிய உலகில் உழைக்கும் மக்களுக்கு அங்கீகாரம் கிடைக்க பாடுபட்டவர். மேலாண்மை பொன்னுசாமியின் இழப்பு, இந்த நாட்டிலுள்ள உழைக்கும் மக்களுக்கும் முற்போக்கு இயக்கங்களுக்கும் பேரிழப்பு' என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி