ஆப்நகரம்

வடகொரியாவை பாராட்டிப்பேசிய கேரள முதல்வர்!

கேரள முதல்வர் பிரனாயி விஜயன் கட்சிக் கூட்டத்தில் பேசியபோது வடகொரியவை பாராட்டியுள்ளார். இந்த செயல் அதிக சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

samayam tamil 4 Jan 2018, 4:28 pm
கேரள முதல்வர் பிரனாயி விஜயன் கட்சிக் கூட்டத்தில் பேசியபோது வடகொரியவை பாராட்டியுள்ளார். இந்த செயல் அதிக சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil kerala cm pinarayi vijayan praises north korea for successfully defending us pressure
வடகொரியாவை பாராட்டிப்பேசிய கேரள முதல்வர்!


கடந்த செவ்வாய்கிழமை கோழிக்கோட்டில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட கூட்டத்தில் பினராயி விஜயன் வடகொரியவை பாராட்டி பேசியுள்ளார். அப்போது அவர் கூறியிருப்பதாவது ‘அமெரிக்காவின் அழுத்தங்களிலிருந்து வடகொரியா தன்னை மிக திறமையாக தற்காத்து கொண்டுள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அளவிற்குக் சீனாவால் ஏகாதிபத்திய சக்திகளை எதிர்க்க முடியவில்லை. என்று அவர் கூறினார்.

வடகொரியா தொடர்ந்து பல ஏவுகணை சோதனைகள் செய்வதை அமெரிக்கா, ஜப்பான் போன்ற உலக நாடுகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. வடகொரியா தொடர்ந்து அமெரிக்காவை பல முறை மிரட்டி வருகிறது. இதனால் ஐ.நா சபை வடகொரியா மீது பொருளாதாரத்தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வடகொரியாவை ஆதரிக்கும் வகையில் கேரள முதல்வர் பேசியுள்ளது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட கூட்டத்திற்கான விளம்பரப் பலகையில் வடகொரிய அதிபரின் படம் இடம் பெற்றுள்ளது பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி