ஆப்நகரம்

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் கேரள முதல்வர்!

கேரள முதல்வர் பினராயி விஜயன் மருத்துவ சிகிச்சைக்காக அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார்.

Samayam Tamil 31 Jul 2018, 11:19 am
கேரள முதல்வர் பினராயி விஜயன் மருத்துவ சிகிச்சைக்காக அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார்.
Samayam Tamil 05


கேரள முதல்வர் பினராயி விஜயன் மருத்துவ சிகிச்சைக்காக, ஆகஸ்டு 19 ஆம் தேதிஅமெரிக்கா செல்கிறார். அமெரிக்காவின், மினசோட்டா மாகாணத்தில் உள்ள ரோசெஸ்டர் நகரில்செயல்பட்டு வரும் மயோ கிளினிக் மருத்துவமனையில்அவர் சிகிச்சை பெற உள்ளார்.ஆகஸ்டு 19 ஆம் தேதி முதல் செப்டம்பர் 6 தேதி வரை மயோ கிளினிக்மருத்துவமனையில் சிகிச்சை பெற உள்ள பினராயி விஜயனின்செலவுகளை கேரள அரசு ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பயணத்தில் அவரின் மனைவி கமலா விஜயனும் அவருடன் செல்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் எதற்காக சிகிச்சை பெறுகிறார், என்ன சிகிச்சை பெற உள்ளார்என்ற எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. மயோ கிளினிக் மருத்துவமனைசர்வதேசதரம் கொண்டது. நீரிழிவு நோய், நரம்பியல் கோளாறு , சிறுநீரக பிரச்னை, இதய நோய், புற்றுநோய் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பிரபலமானது.

முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே ஆந்தோனி, புரோஸ்டேட் பிரச்சனைக்காக இங்கே சிகிச்சை பெற்றார். அதுபோல் கேரளாவின்முன்னாள்சபாநாயகர்கார்திகேயன், கல்லிரல் சிகிச்சைக்காக இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் கேரள நடிகை மம்தா மோகன்தாஸ் இங்கே புற்றுநோய் சிகிச்சை பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி