ஆப்நகரம்

Swapna Suresh: ஸ்வப்னா சுரேஷுக்கு இப்படியொரு அதிர்ச்சி; தங்கக் கடத்தல் வழக்கு விசாரணை நிலவரம் என்ன?

தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷுக்கு இப்படியொரு சோகம் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 14 Aug 2020, 6:58 am
கேரள மாநிலத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரகத்தின் பெயரில் வெளிநாட்டிலிருந்து தொடர்ச்சியாக தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஜூலை 4ஆம் தேதி சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரியவந்தது. இதன் பின்னணி குறித்த விசாரணையில் ஸ்வப்னா சுரேஷ் என்ற நபர் இருப்பது கண்டறியப்பட்டது. இவரும், இவரது கூட்டாளிகளும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கை என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது.
Samayam Tamil Swapna Suresh


இதில் அடுத்தடுத்து பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், ஜாமின் கோரி கேரள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சயீத் அலாவி ஆகியோர் மனு தாக்கல் செய்தார். இது நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் ஜாமின் மனு மீது கூடுதல் தலைமை நீதித்துறை மேஜிஸ்டிரேட் விசாரணை நடத்தினார்.

யார் இந்த ஸ்வப்னா? கேரளாவை அதிரவைத்த தங்கக் கடத்தல் சம்பவத்தின் பின்னணி!

அப்போது, தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கும் ஸ்வப்னா சுரேஷ் ஐக்கிய அரபு அமீரகத் தூதரகம் மற்றும் கேரள அரசில் மிகவும் செல்வாக்கு மிகுந்த நபராக இருந்திருக்கிறார். தூதரகத்தில் இருந்து ராஜினாமா செய்த பின்னரும் முக்கிய அதிகாரிகளுக்கு உதவிகள் செய்து வந்துள்ளார். போதிய ஆதாரங்களுடன் விசாரணை நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது.

எனவே தற்போது ஜாமின் கொடுத்தால் விசாரணையைப் பாதிக்கும். சாட்சியங்கள் கலைக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே ஜாமின் வழங்க முடியாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த திங்கள் அன்று என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் ஸ்வப்னாவின் ஜாமின் மனுவை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. அப்போது, தங்கக் கடத்தல் மூலம் பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

அடேங்கப்பா ஸ்வப்னா சுரேஷ் இப்படியா? - பெரிய குண்டைத் தூக்கிப் போட்ட என்.ஐ.ஏ!

ஸ்வப்னாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றாக நிரூபணமாகி வருகிறது. எனவே ஜாமின் கொடுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. ரூ.100 கோடிக்கு அதிகமான மதிப்புள்ள கேரள தங்கக் கடத்தல் விவகாரத்தை என்.ஐ.ஏ, சுங்கத்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்டவை தீவிரமாக விசாரித்து வருகின்றன.

அடுத்த செய்தி