ஆப்நகரம்

கேரள வெள்ளம்: தேவாலயத்துக்கு அருகில் இந்து மதத்தவரின் உடல் அடக்கம்

கேரள மாநிலத்தில் முகாமில் தங்கிருந்த இந்து மதத்தவர் மரணமடைந்த நிலையில், அவரது உடல் தேவாலயத்திற்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Aug 2018, 6:21 pm
கேரள மாநிலத்தில் முகாமில்தங்கிருந்த இந்து மதத்தவர் மரணமடைந்த நிலையில், அவரது உடல் தேவாலயத்திற்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil church-burial


சுமார் 10 நாட்களாக கேரள மாநிலத்தில் மழை பெய்துவந்தது. இதனால் கேரள மாநிலம் முழுமையாக பாதிக்கப்பட்டது. கிராமபுரங்கள் பாதிப்பு அதிகமாக இருந்தது. உடைமைகள், விளை நிலங்கள் அனைத்தையும் இழந்து, அடிப்படை வசதிகள்கூட கிடைக்காமல் அவதிப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அண்டை மாநிலங்கள் தொடர்ந்து உதவிகள் செய்து வருகின்றன.

இயற்கையின் பேரழிவு கேரளாவை பாதித்தாலும் மனிதநேயம் கேரளாவை மீட்டுள்ளது. சாதி, மதம், சமயம், மொழிஎன்று அனைத்து பேதங்களையும் கடந்து அனைவரும் உதவி செய்துவருகின்றனர்.

இந்நிலையில் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டமாவட்டங்களில் இடுக்கியும் ஒன்று. இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா அருகே உள்ள சித்திரபுரம் மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதால், அருகில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு தங்கிருந்த சுப்பிரமணியன் என்பவர்உடல்நலக்குறைவால் முகாமில் உயிாிழந்தார்.

இவருக்கு சொந்தமான நான்கு ஏக்கர் நிலம் தண்ணீரில் மூழ்கி உள்ளது. மேலும் அனைத்து இடங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் எங்கு புதைப்பது என்று அவரது குடும்பத்தினர்தவித்தனர். இந்நிலையில் தேவாலயத்தின் பாதிரியார் ஷிண்டே தாமஸ் தேவாயத்திற்கு அருகில் அடக்கம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடா்ந்து சுப்பிரமணியனின் உடலைஇந்து முறைப்படி சடங்குகள் செய்து அடக்கம் செய்துள்ளனர்.

அடுத்த செய்தி