ஆப்நகரம்

Kerala Flood : முல்லை பெரியார் அணை பலமாக உள்ளதாக கேரளா அரசே வெளியிட்ட அறிக்கை

முல்லை பெரியார் அணை பலமாக தான் உள்ளது வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரளா அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 17 Aug 2018, 9:15 am
முல்லை பெரியார் அணை பலமாக தான் உள்ளது வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரளா அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil mullai-periyar-dam

தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள முல்லை பெரியார் அணை மூலம் தேனி, மதுரை, சிவகங்கை, விருது நகர், இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர் பெருகின்றன.

இதன் மூலம் இடுக்கி அணைக்கு தண்ணீர் வர வேண்டும், அதனால் முல்லை பெரியாறு அணை பலமில்லாமல் உள்ளதாக கேரளா வாதாடி வந்தது.

பலமாக இருக்கும் முல்லை பெரியாறு அணை :
இந்நிலையில் கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கேரளாவின் 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்களுக்கு மிக அதிக வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இடுக்கி அணையிலிருந்து அதிக தண்ணீர் திறக்கப்பட்டு, இடுக்கி மாவட்டமே வெள்ளத்தில் மூல்கியுள்ளது. அதனால் மேலும் முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டால், அபாயம் மேலும் அதிகமாகும் என்பதால், திறக்கப்படாமல் உள்ளது.


அணை உடையும் அபாயம்:இந்நிலையில் முல்லை பெரியாறு அணை உடையும் ஆபத்து உள்ளதாகவும், அதில் விரிசல் விட்டுள்ளதாகவும் வாட்ஸ் அப்பில் தீயாக வதந்தி பரவியது. இந்த வதந்தியை தடுக்கும் வகையில், முல்லை பெரியாறு அணை பலமாக தான் உள்ளது. அணை உடையும் என வதந்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரளாவின் நீர் வளங்கள் துறை சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி