ஆப்நகரம்

நாங்க எப்படா கேரளாவுக்கு 700 கோடி தரோம்னு சொன்னோம்?: பின்வாங்கியது யுஏஇ!!

கேரளா வெள்ளப் பெருக்கிற்கு, யுஏஇ அரசு ரூ.700 கோடியை நிவாரணமாக தருவதாக, இதுவரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

Times Now 24 Aug 2018, 4:34 pm
Samayam Tamil நாங்க எப்படா கேரளாவுக்கு 700 கோடி தரோம்னு சொன்னோம்?: பின்வாங்கியது யுஏஇ!!
நாங்க எப்படா கேரளாவுக்கு 700 கோடி தரோம்னு சொன்னோம்?: பின்வாங்கியது யுஏஇ!!
கேரளா வெள்ளப் பெருக்கிற்கு, யுஏஇ அரசு ரூ.700 கோடியை நிவாரணமாக தருவதாக இதுவரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

கேரளாவில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக, கேரளாவின் பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் சிக்கி, இதுவரையில் 350 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும், லட்சக்கணக்கானோர் தங்கள் வாழ்விடங்களை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது, மழை வெள்ளம் வடிந்து வரும் நிலையில், நிவாரணப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பிற்கு உதவும் விதமாக, பல மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும், சினிமா பிரபலங்களும் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகின்றனர். அதிலும், மலையாள நடிகர்களைக் காட்டிலும், தமிழ் நடிகர்கள் அதிக அளவில் கேரளாவிற்கு உதவி வருகின்றனர்.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் கேரள முதல்வர் பினராய் விஜயன், அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான், கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ரூ.700 கோடி வழங்க முன்வந்துள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்திய அரசே இதுவரை வெள்ள நிவாரணத்திற்கு 500 கோடி ரூபாய் மட்டுமே வழங்கியுள்ள நிலையில், யுஏஇ இவ்வளவு பெரிய தொகையை வழங்குவதாக வெளியான செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து நிதி எதையும் பெறுவதில்லை என்ற கொள்கையை இந்திய அரசு பின்பற்றுவதால், இந்தியா அரசு அந்த நிதியை ஏற்காது என கூறப்பட்டது. இதனால், கேரளாவை ஆளும் மாநில அரசுக்கும், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டானது. மேலும், அரசின் இந்த கொள்கை ரீதியான முடிவை, பலரும் சமூக ஊடகங்களில் விமர்சித்தும், கிண்டல் செய்தும் வந்தனர்.

இந்நிலையில், யுஏஇ அரசின் தூதரான அஹமது அல்பானா, யுஏஇ இதுவரை 700 கோடி ரூபாய் தருவதாக எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என புதிய சர்ச்சை ஒன்றைக் கிளப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “கேரளாவில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புக் குறித்து தற்போது மதிப்பிடப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில், நிவாரணத் தொகையை எப்படி அறிவிக்க முடியும்” என தெரிவித்துள்ளார். இது ஒருபுறம் இருந்தாலும், வெள்ளப் பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியானதும், நிவாரணத் தொகை குறித்த அறிவிப்பை யுஏஇ வெளியிடும் என்பதையும் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

ஆனால், கேரளா முதல்வர் அறிவிக்கப்படாத 700 கோடி ரூ. நிவாரணத் தொகையை, யுஏஇ வழங்க உள்ளதாக கூறி, மத்திய அரசிடம் பிரச்சனை உண்டாக்கியது, அரசியல் நோக்கத்திற்காக இருக்குமோ என்ற சந்தேகம் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

அடுத்த செய்தி