ஆப்நகரம்

பேரழிவின் மத்தியில் இருக்கிறோம் – பினராயி விஜயன் உருக்கம்

நாம் ஒரு பேரழிவின் நடுவில் இருக்கிறோம், அதனை சமாளிக்க அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என்று கேரளா முதல்வா் பினராயி விஜயன் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Samayam Tamil 18 Aug 2018, 10:35 pm
நாம் ஒரு பேரழிவின் நடுவில் இருக்கிறோம், அதனை சமாளிக்க அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என்று கேரளா முதல்வா் பினராயி விஜயன் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
Samayam Tamil Pinarayi Vijayan 1


கேரளாவில் வரலாறு காணாத மழை, வெள்ளம், நிலச்சரிவு என ஒட்டுமொத்த மாநிலமும் பேரிழப்பை சந்தித்துள்ளது. இழப்பை ஈடு செய்ய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உதவிக்கரங்கள் நீண்ட வண்ணம் உள்ளன. ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினா்கள், எம்.பி.க்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை நிவாரண நிதிக்காக வழங்க ஒப்புக் கொண்டுள்ளனா்.

மேலும் உத்தரகாண்ட் மாநில அமைச்சா்கள் மற்றும் அனைத்து பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினா்களும் தங்களது சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்க முடிவு செய்துள்ளனா். இருப்பினும் வெள்ள சேதம் 20 ஆயிரம் கோடி என்று கணக்கிடப்பட்டுள்ள நிலையில், அவசர கால உதவித் தொகையாக ரூ.500 கோடி வழங்கப்படும் என்று தொிவித்துள்ளாா்.


இந்நிலையில் மாநில முதல்வா் பினராயி விஜயன் இன்று பேட்டியளித்தாா். அப்போது “நாம் தற்போது ஒரு பேரழிவின் மத்தியில் இருக்கிறோம். அதனை சமாளிக்க அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும். இன்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 33 போ் உயிாிழந்துள்ளனா். மொத்தமாக உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 357ஆக உயா்ந்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமாா் 19 ஆயிரத்து 512 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று அவா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி