ஆப்நகரம்

திருநங்கைகளுக்கு கல்வியை உறுதிசெய்து முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கேரள அரசு

மாநிலத்தில் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் திருநங்கைகளுக்கு கூடுதலாக இரண்டு இடங்கள் ஒதுக்கிட கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Samayam Tamil 4 Jul 2018, 3:28 pm
மாநிலத்தில் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் திருநங்கைகளுக்கு கூடுதலாக இரண்டு இடங்கள் ஒதுக்கிட கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Samayam Tamil 53112511
திருநங்கைகளுக்கு கல்வி: கேரளாவின் முக்கிய அறிவிப்பு


திருநங்கைக்குரிய குணாதிசியங்களோடு பிறக்கும் குழந்தைகள், சமூகத்தில் பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

குறிப்பாக அவர்களில் பலர் பள்ளி அளவிலேயே கல்வியை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மேலும் சமூகத்திலும் அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகிறது.

இதை தடுக்கும் வகையில், திருநங்கைகளுக்கு தடை ஏற்படாமல் கல்வி கிடைக்க, அனைத்து கல்லூரிகளும் அவர்களுக்காக கூடுதலாக இரண்டு இடங்களை ஒதுக்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

கேரளாவில் கல்வித்துறை பிறப்பித்துள்ள உத்தரவு, அம்மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

கல்வி, விளையாட்டு, அரசு பணிகள், தொழில் முனைவோர் என திருநங்கைகளின் வாழ்க்கை முறை இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் மாறி வருகிறது

அதை மேலும் வலுப்படுத்தும் வகையில் கேரளாவின் இந்த அறிவிப்பு இந்தியளவில் உள்ள திருநங்கைகள் சமூக மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்த செய்தி