ஆப்நகரம்

இன்னும் ஒரு வருஷத்துக்கு ஃபேஸ் மாஸ்க்தான்... கேரள அரசு அதிரடி அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் இன்னும் ஓராண்டுக்கு நடைமுறையில் இருக்கும் என்று கேரள மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

Samayam Tamil 5 Jul 2020, 7:59 pm
இந்தியாவில் கேரள மாநிலத்தில்தான், கடந்த ஜனவரி 29 ஆம் தேதி முதன்முதலாக கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. உடனே விழித்துக் கொண்ட அந்த மாநில அரசு, பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகளை துரித கதியில் மேற்கொண்டது.
Samayam Tamil kerala


இதன் பயனாக, கொரோனா தொற்று பட்டியலில் டாப் 5 இடத்தில் கேரளா, மளமளவென கீழிறங்கியது. தற்போது அங்கு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை தொடரும் அளவுக்கு நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது.

இருப்பினும், அன்லாக் 2.0 -வில் மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வுகள், கட்டுப்பாடுகள் கேரளாவில் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருவதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

10ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கு கொரோனா..! அரசுக்கு சிக்கல்?

அத்துடன், மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பு நடைமுறைகள், விதிமுறைகள் இன்னும் ஒராண்டுக்கு அமலில் இருக்கும் என்று கேரள அரசு இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

குறிப்பாக, பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு நடைமுறைகள் தொடர்ந்து ஓராண்டுக்கு அமலில் இருக்கும் என்று கேரள மாநில அரசு இன்று (ஜூலை 5) அதிரடியாக அறிவித்துள்ளது.

இவருக்கு ஆடம்பரம் தான் முக்கியம்..! கொரோனாவை தடுக்க 'தங்க மாஸ்க்'...

முன்னதாக, நாடு முழுவதும் வரும் நவம்பர் மாதம் வரை ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் இலவசமாக வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்தார்.

கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் இந்த ஆண்டு முழுவதும் இருக்கலாம் என்பதை கருத்தில் கொண்டே, பிரதமர் இவ்வாறு அறிவித்திருக்கிறார் என்று பொதுமக்கள் மத்தியில் பரவலாக கருத்து எழுந்தது. இந்த நிலையில் கேரள மாநில அரசு இவ்வாறு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி