ஆப்நகரம்

சபரிமலை பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்: வெளியான அபாய எச்சரிக்கை!

கேரளாவில் பெய்துவரும் மிக கனமழை மழை காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Oct 2021, 10:38 am
கேரள நதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக நீரின் அளவு உயர்ந்து வருகின்றன. இதனால் 10 அணைகள் உள்ள பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil sabarimala Pampa flood


அரபிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

மழை வெள்ள நிலவரம் குறித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன், சுகாதாரத் துறை அமைச்சர் வீணா வர்கீஸ் ஆகியோர் நேற்று (அக்டோபர் 18) ஆலோசனை நடத்தினர்.

திமுக அரசில் ஊழல்? அமைச்சர் மகன் கொண்டாடும் டெண்டர் தீபாவளி!

அதன் பின் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். “கனமழை காரணமாக காக்கி அணை நிரம்பி வழிவதால் அந்த அணையில் இருந்து தண்ணீரைத் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பம்பை நதியில் 15 செ.மீ. அளவுக்கு நீரின் அளவு அதிகரிக்கும்.

அக்டோபர் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால் சபரிமலைக்கு பக்தர்களை அனுமதிக்க முடியாது. அக்கோயிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக அக்டோபர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இப்போதைக்கு சபரிமலை யாத்திரையை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. பம்பை நதியில் தண்ணீரின் அளவு அதிகரித்துவிட்டால், அதன் பின் சபரிமலை யாத்திரை மேற்கொள்வோரை மீட்பது சிரமமாகிவிடும்” என கூறினர்.
சுகாதாரத் துறைச் செயலாளர் மாற்றம்? ஓ அடுத்து இவங்க தானா?
மேலும் அவர்கள், “காக்கி நதியின் இரு மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. மழை தற்போது குறைந்துள்ளது. எனினும் 20ஆம் தேதி முதல் மீண்டும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காக்கி, சோலையாறு, மாட்டுப்பட்டி, மூழியாறு, குண்டாலா, பீச்சி உள்ளிட்ட 10 அணைகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அணைகள் பத்தனம்திட்டா, இடுக்கி, திருச்சூர் மாவட்டங்களில் அமைந்துள்ளன. மற்ற 8 அணைகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி