ஆப்நகரம்

மாட்டிறைச்சி தடைக்கு ஏதிராக தீர்மானம் நிறைவேற்றம் : கேரள அரசு அதிரடி

மாடுகளை இறைச்சிக்காக விற்க தடை விதிக்கப்பட்டதற்கு ஏதிராக கேளர அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

TNN 8 Jun 2017, 11:34 am
திருவனந்தபுரம்: மாடுகளை இறைச்சிக்காக விற்க தடை விதிக்கப்பட்டதற்கு ஏதிராக கேளர அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
Samayam Tamil kerala govt enact the resolution against centers slaughter ban
மாட்டிறைச்சி தடைக்கு ஏதிராக தீர்மானம் நிறைவேற்றம் : கேரள அரசு அதிரடி


மாட்டிறைச்சி தடைக்கு ஏதிராக கேரள சட்டசபை சிறப்பு கூட்ட தொடர் இன்று நடைப்பெற்றது. இந்த கூட்ட தொடரில் மாடுகளை இறைச்சிக்காக விற்க மத்திய அரசு தடை விதித்தது குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் கேளர முதல்வர் பினராயி விஜயன் மாட்டிறைச்சி தடைக்கு ஏதிரான தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு பாஜக எம்.எல்.ஏவை தவிர அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்தனர். இதனால் இந்த தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய மத்திய அரசு தடை செய்ததோ அப்போதே கேளராவில் கடும் ஏதிர்ப்பு கிளம்பியது. கேளர நெட்டிசன்கள் திராவிட நாடு கோரிக்கையை இணையத்தில் முன் வைத்தனர். மேலும் கேளர முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


kerala govt enact the resolution against Center’s slaughter ban

அடுத்த செய்தி