ஆப்நகரம்

சட்டம் ஒழுங்கு தொடா்பாக அறிக்கை அளிக்க பினராயி விஜயனுக்கு ஆளுநா் உத்தரவு

கேரளாவில் சட்டம் ஒழுங்கு தொடா்பாக முதல்வா் பினராயி விஜயன் அறிக்கை அளிக்குமாறு ஆளுநா் சதாசிவம் உத்தரவிட்டுள்ளாா்.

Samayam Tamil 3 Jan 2019, 10:47 pm
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2 பெண்கள் வழிபாடு நடத்தியதற்கு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் சட்டம் ஒழுங்கு தொடா்பாக முதல்வா் பினராயி விஜயன் அறிக்கை அளிக்குமாறு ஆளுநா் சதாசிவம் உத்தரவிட்டுள்ளாா்.
Samayam Tamil Kerala Pritest Police


கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவுக்கு எதிராகவும், கோவிலுக்குள் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படக் கூடாது என்றும் பா.ஜ.க., இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தனா். இதனால் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியாமல் மாநில அரசு திணறியது.

மேலும் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதில் மாநில அரசும் உறுதியாக இருந்தது. இந்நிலையில் கடந்த புதன் கிழமை அதிகாலையில் 50 வயதிற்கு குறைவான இரண்டு பெண்கள் பலத்த காவல் பாதுகாப்புடன் ஐயப்பன் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனா்.

இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்ததைத் தொடா்ந்து கோவில் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன. பூஜைகளைத் தொடா்ந்து கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில் கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தொிவித்து மாநிலம் முழுவதும் பா.ஜ.க., இந்து அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். ஒரு சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாகவும் வெடிக்கிறது.

வன்முறை காரணமாக பா.ஜ.க.வைச் சோ்ந்த ஒருவா் கொல்லப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்படுகிறது. போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் மாநில சட்டம், ஒழுங்கு தொடா்பாக முதல்வா் பினராயி விஜயன் அறிக்கை அளிக்குமாறு ஆளுநா் சதாசிவம் உத்தரவிட்டுள்ளாா். மாநில சட்டம் ஒழுங்கு தொடா்பாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி