ஆப்நகரம்

கேரள கோவில்களில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி பட்டறைக்கு தடை?

கேரள கோவில்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பயிற்சி நிகழ்வுகளுக்கு தடை விதிக்க மாநில சட்டத்துறை, தலைமைச் செயலருக்கு பரிந்துரை செய்துள்ளது.

TOI Contributor 8 Sep 2016, 11:22 am
திருவனந்தபுரம்: கேரள கோவில்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பயிற்சி நிகழ்வுகளுக்கு தடை விதிக்க மாநில சட்டத்துறை, தலைமைச் செயலருக்கு பரிந்துரை செய்துள்ளது.
Samayam Tamil kerala may ban rss activities in temples
கேரள கோவில்களில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி பட்டறைக்கு தடை?


ஆர்.எஸ்.எஸ் எனப்படும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் அமைப்பின் மாணவர்களுக்கு உடற்பயிற்சி, தற்காப்பு கலை தொடர்பான பயிற்சிகள் உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வருகின்றன. இவை பெரும்பாலும் கோவில்களில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கேரள மாநில தேவசம் அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன், கோவில்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று சட்டத்துறைக்கு முன்மொழிந்துள்ளார். இதையடுத்து கேரள காவல்துறை சட்டப்பிரிவு எண் 73ன் படி, இதுபோன்ற நிகழ்வுகளை தடை செய்ய தலைமைச் செயலாளருக்கு சட்டத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

மேலும் இதுதொடர்பான மசோதா ஒன்று, முதலமைச்சர் பினராயி விஜயன் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கேரள கோவில்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நடவடிக்கைக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி