ஆப்நகரம்

பாலியல் புகாருக்கு நடவடிக்கை இல்லை: கேரளாவில் கன்னியாஸ்திரிகள் தொடர் போராட்டம்

கேரளாவில் பாலியல் புகார் கூறப்பட்ட பி‌ஷப்பை கைது செய்யக்கோரி கன்னியாஸ்திரிகள் போராட்டம் தொடர் போராட்டம் நடத்திய இந்தியளவில் கவனமீர்த்துள்ளது.

Samayam Tamil 10 Sep 2018, 1:32 pm
கேரளாவில் பாலியல் புகார் கூறப்பட்ட பி‌ஷப்பை கைது செய்யக்கோரி கன்னியாஸ்திரிகள் போராட்டம் தொடர் போராட்டம் நடத்திய இந்தியளவில் கவனமீர்த்துள்ளது.
Samayam Tamil kerala-protest-cover-pic
பஞ்சாப் பிஷப்பை கைது செய்யக்கோரி கேரளா கன்னியாஸ்திரிகள் போராட்டம்


பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிஷப்பாக உள்ள ஃபிராங்கோ முள்ளக்கல் மீது கேரளாவின் கோட்டாயம் மாவட்டத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகாரி கூறியிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக அந்த கன்னியாஸ்திரி குருவிலாங்கோடு பகுதி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். அதை டிஎஸ்பி., சுபாஷ் தலைமையிலான தனிப்படை போலீஸ் இதுகுறித்து விசாரணை நடத்தினார்கள்.

பிறகு ஜலந்தார் சென்று பிஷப் ஃபிராங்கிடம் அவர்கள் விசாரணை செய்தனர். இதில் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனிப்படை போலீசார் அவரை கைது செய்யாமல் கேரளா திரும்பினர்.

இதனால் ஏமாற்றமடைந்த பாதிக்கப்பட கன்னியாஸ்திரியின் உறவினர்கள், கொச்சியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் மேலும் 5 கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி கன்னியாஸ்திரிகள் நடத்திய இந்த போராட்டம் நாடு முழுவதும் எதிரொலித்தது. மேலும் சமூகவலைதளங்களிலும் ஆதரவு குவிந்தது.

பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு தேவாலயம், அரசு, போலீஸ் ஆகியவற்றால் நிதி கிடைக்கப்போவதில்லை. இனி தங்களது நம்பிக்கை நீதிமன்றம் தான் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

நேற்று இரண்டாவது நாளாக, கன்னியாஸ்திரியின் கோரிக்கைக்கு ஆதரவும் கேட்டு போராட்டம் நடைபெற்ற நிலையில், பி‌ஷப் பிராங்கோ முள்ளக்கல்லை கைது செய்யக்கோரி கன்னியாஸ்திரியின் உறவினர்கள் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர்.

அடுத்த செய்தி