ஆப்நகரம்

தேசிய கீதத்திற்கு எதிரான கருத்து:கேரள எழுத்தாளர் மீது தேசதுரோக வழக்கு..!

தேசிய கீதத்திற்கு எதிராக பேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்த கேரள எழுத்தாளர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

TNN 19 Dec 2016, 10:38 am
தேசிய கீதத்திற்கு எதிராக பேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்த கேரள எழுத்தாளர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil kerala writter kamal c chavara arrested in sedition case
தேசிய கீதத்திற்கு எதிரான கருத்து:கேரள எழுத்தாளர் மீது தேசதுரோக வழக்கு..!

தியேட்டர்களில் படம் திரையிடப்படுவதற்கு முன்னர் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் எனவும் தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்தாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்யலாம் எனவும் சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவுக்கு நாடு முழுவதும் ஆதரவும்,எதிர்ப்பும் எழுந்தன.

இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த எழுத்தாளரான கமல்.சி.சவரா என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில்,உச்சநீதிமன்றத்தின் தேசிய கீதம் குறித்த உத்தரவை விமர்சித்து எழுதியிருந்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கேரள பாஜக கட்சியின் இளைஞர் அணியினர்,கமல்.சி.சவரா மீது காவல்துறையில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்ததாக,கமல்.சி.சவரா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கொல்லம் காவல்துறையினரின் வேண்டுகோளுக்கு இணங்க,கோழிக்கோடு போலிசார் கமலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Kerala writter Kamal.C. Chavara arrested in sedition case

அடுத்த செய்தி