ஆப்நகரம்

ஆதார் மயமாகிறது பெங்களூரு விமான நிலையம்

நாட்டிலேயே முதலாவதாக பெங்களூரில் உள்ள சர்வதேச விமான நிலையம் முற்றிலும் ஆதார் மயம் ஆக்கப்பட்ட விமான நிலையமாக உருவாக உள்ளது.

TOI Contributor 8 Oct 2017, 11:43 am
நாட்டிலேயே முதலாவதாக பெங்களூரில் உள்ள சர்வதேச விமான நிலையம் முற்றிலும் ஆதார் மயம் ஆக்கப்பட்ட விமான நிலையமாக உருவாக உள்ளது.
Samayam Tamil kia to become indias first fully aadhaar enabled airport by 2018
ஆதார் மயமாகிறது பெங்களூரு விமான நிலையம்


பெங்களூரில் சர்வதேச விமான நிலைய நிர்வாகம் சார்பில் கெம்பே கௌடா சர்வதேச விமான நிலையத்தை முழுதும் ஆதார்மயமாக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அந்த விமான நிலையம் முழுதும் ஆதார் மூலம் செயல்படும் முதல் சர்வதேச விமான நிலையமாக இருக்கும்.

டிஜிட்டல்மயமாக்கப்பட்ட விமான சேவையை அளிக்கும் முகமாக விமான நிலைய நுழைவு, விமானத்தில் பயணிகள் அனுமதி வழங்குவது உள்ளிட்டவற்றில் ஆதார் பயன்பாட்டைப் புகுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விமான நிலைய சோதனைகள் ஒவ்வொன்றும் 5 விநாடிகளில் பயோமெட்ரிக் முறையில் ஆதார் மூலம் செய்யப்படும். இதனால், மொத்தமாக பயணிகள் விமான இருக்கையை அடைவதற்கு 10 நிமிடங்களே ஆகும். தற்போது ஒரு நபர் முழுமையான சோதனை செய்யப்படுவதற்கு 25 நிமிடங்கள் வரை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி