ஆப்நகரம்

3 பேரை கொன்ற புலியை பிடித்த வனத்துறையினர்!

நாகர்ஹோளே பகுதியில் ஒரே மாதத்தில் 4 பேரை கொன்ற புலியை வனத்துறையினர் பிடித்து, மைசூர் விலங்குகள் நல பூங்காவில் ஒப்படைத்தனர்.

Samayam Tamil 2 Feb 2019, 5:40 pm
நாகர்ஹோளே பகுதியில் ஒரே மாதத்தில் 4 பேரை கொன்ற புலியை வனத்துறையினர் பிடித்து, மைசூர் விலங்குகள் நல பூங்காவில் ஒப்படைத்தனர்.
Samayam Tamil 67801929


கர்நாடக, தொட்டா பைரனா குபே பகுதியில் புலிகள் சரணாலயம் உள்ளது. இங்குள்ளபுலி ஒன்றுநாகர்ஹோளே பகுதியில்உள்ள மலைவாழ்மக்கள் 3 பேரை கொன்றுள்ளது. 55 வயதான கென்சா என்பவர் கடந்த வியாழக்கிழமை ஆட்டிற்கு புல் பறிக்கவும்,சர்க்கரை வள்ளி கிழங்குகளை எடுக்கவும் சென்றிருந்தார். அப்போது அவரை இந்த புலி தாக்கி கொன்றுள்ளது.

அதேபோல் மச்சுருஹாடி பகுதியில், வீட்டிற்குவெளியில் தூங்கிக்கொண்டிருந்தமலைவாழ் இளைஞரை கொன்றது. அதே பகுதியை சேர்ந்தஜெனு குருபா என்பவரையும் இந்த புலி கொன்றுள்ளது.

மூன்று பேரை கொன்றதை தொடர்ந்து உடனடியாக புலியை சுட்டு பிடிக்க வேண்டும் என்று பழங்குடி மக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர். 5 யானைகளை கொண்டு முகாம் அமைத்து புலியை பிடிக்க வனத்துறையினர் முயற்சித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று புலியை பிடித்த வனத்துறையினர் மைசூர் விலங்குகள் நல பூங்காவில் ஒப்படைக்க முடிவெடுத்தனர். ஆனால் புலியை சுட்டு பிடிக்க வேண்டும் என்றே தாங்கள் தெரிவித்ததாகவும், எனவே புலியை கொலை செய்ய வேண்டும் என்று மலைவாழ்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து போரட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வனத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அடுத்த செய்தி