ஆப்நகரம்

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் மேற்கொண்ட பி.எப். முதலீடு மீது விசாரணை

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மேற்கொண்ட பி.எப்., முதலீடுகள் பற்றி விசாரணை நடத்தப்படும், என மத்திய இணையமைச்சர் பந்தாரு தத்தாத்ரேயா கூறியுள்ளார்.

TNN 13 Mar 2016, 3:06 pm
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மேற்கொண்ட பி.எப்., முதலீடுகள் பற்றி விசாரணை நடத்தப்படும், என மத்திய இணையமைச்சர் பந்தாரு தத்தாத்ரேயா கூறியுள்ளார்.
Samayam Tamil kingfisher airlines pf contributions to be probed labour ministry
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் மேற்கொண்ட பி.எப். முதலீடு மீது விசாரணை


விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், நிதிச்சிக்கல் காரணமாக, வர்த்தகப் பணிகளை நிறுத்தியுள்ளது. இதனால், அந்நிறுவனத்தில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை, ஓய்வூதியம் உள்ளிட்ட இதர பணப்பலன்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று, கிங்ஃபிஷர் முன்னாள் ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும், எனவும் அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்நிலையில், இதுபற்றி தொழிலாளர் துறை அமைச்சகம் விசாரணை நடத்தும் என்று, அத்துறைக்கான மத்திய இணையமைச்சர் பந்தாரு தத்தாத்ரேயா கூறியுள்ளார். கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் செயல்பட்ட காலத்தில், மேற்கொண்ட பிஎப்., முதலீடுகள் மற்றும் வெளியே எடுக்கப்பட்ட ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட விவரங்கள் பற்றி விரிவாக விசாரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் மல்லையா மீது பல்வேறு தரப்பிலும் விமர்சனம் எழுந்துள்ளதை அடுத்து, இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தப் போவதாகவும், பந்தாரு தத்தாத்ரேயா சுட்டிக்காட்டி உள்ளார்.

அடுத்த செய்தி