ஆப்நகரம்

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மகாராஷ்டிர அரசு ஒப்புதல்!

விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக மகாராஷ்டிர அரசு ஒப்புக்கொண்தால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Mar 2018, 7:05 pm
விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக மகாராஷ்டிர அரசு ஒப்புக்கொண்தால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
Samayam Tamil kisan rally government agrees to demands and farmers vapass the protest
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மகாராஷ்டிர அரசு ஒப்புதல்!


பயிர்க்கடன் தள்ளுபடி, விளைபொருள்களுக்கு தகுந்த விலை, எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டியால் அறிவிக்கப்பட்ட பரிந்துரைகளை அமல்படுத்துவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி முன்னணி இயக்கமான கிஷான் சபா நாசிக்கில் இருந்து மகாராஷ்டிராவுக்கு மாபெரும் பேரணி நடத்த முடிவெடித்தது.

ஆயிரக்கணக்கான விவசாயிகள், கடந்த 6 ஆம் தேதி நாசிக்கில் பேரணியை தொடங்கினர். சுமார் 180 கி.மீ தூரம் நடைப்பயணமாக அவர்கள் இன்று மும்பை வந்தடைந்தனர்.

இந்த மாபெரும் போராட்டத்தில் சுமார் 30,000 மேற்பட்ட விசாயிகள் கலந்துகொண்டுள்ளனர். தற்போது மும்பையின் தெற்குப் பகுதியில் உள்ள ஆசாத் மைதானத்தில் அவர்கள் முகாமிட்டுள்ளனர். மேலும் மகாராஷ்டிரா சட்டசபையை முற்றுகையிடவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த மாபெரும் விவசாயிகள் கூட்டம் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஆளும் பாஜக அரசு மீது விவசாயிகள் கொண்டுள்ள அதிருப்தியை இந்த போராட்டம் வெளிப்படுத்தியுள்ளது .

மேலும் விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்க தயாராக இருப்பதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் , விவசாயிகள் அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்தத் தகவலை நீர் வளத்துறை அமைச்சர் கிரிஷ் மகாஜன் வெளியிட்டுள்ளார். அப்போது அவர் கூறியதாவது ‘ விவசாயிகள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது.மேலும் போராட்டத்தை வாபஸ் பெற விவசாயிகள் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

அடுத்த செய்தி