ஆப்நகரம்

சாரதா சிட்பண்ட் முறைகேடு: ராஜீவ் குமாரிடம் சிபிஐ இன்று விசாரணை

கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் விசாரணைக்காக சில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிரார். சாரதா சிட்பண்ட் முறைகேடு தொடர்பாக அவரிடம் இன்று சிபிஐ விசாரணை நடைபெறும்.

Samayam Tamil 9 Feb 2019, 8:24 am
சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்துகிறார்கள்.
Samayam Tamil Untitled-design-131


சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க, அவரது வீட்டிற்குச் சென்ற சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மூன்று நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்.

இதனிடையே சாரதா சிட்பண்ட் முறைகேடு தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.

இதன்படி இன்று ராஜீவ் குமார் விசாரணைக்காக சில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிரார். அவரிடம் இன்று சிபிஐ விசாரணை நடைபெறும்.

அடுத்த செய்தி