ஆப்நகரம்

வெளிமாநில தொழிலாளா்களின் குழந்தைகள் படிக்க சிறப்பு ஏற்பாடு; தொடா்ந்து அசத்தும் பினராயி விஜயன்

கேரளாவில் தங்கி பணியாற்றிவரும் வெளிமாநில தொழிலாளா்களின் குழந்தைகள் படிப்பதற்காக பால சபாக்களை உருவாக்கி முதல்வா் பினராயி விஜயன் தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

TOI Contributor 15 Oct 2017, 5:15 pm
கேரளாவில் தங்கி பணியாற்றிவரும் வெளிமாநில தொழிலாளா்களின் குழந்தைகள் படிப்பதற்காக பால சபாக்களை உருவாக்கி முதல்வா் பினராயி விஜயன் தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Samayam Tamil kudumbasree bala sabha begins
வெளிமாநில தொழிலாளா்களின் குழந்தைகள் படிக்க சிறப்பு ஏற்பாடு; தொடா்ந்து அசத்தும் பினராயி விஜயன்


கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது தென் மாநிலங்கள் முழுவதும் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் கட்டுமான பணி, உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் வடமாநிலம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமானோா் கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கணிசமாக தங்கியிருந்து வேலை பாா்த்து வருகின்றனர்.

அவர்களுடன் அவர்களது குடும்பமும், குழந்தைகளும் வசித்து வருகின்றனர். இந்த சூழலில் கேரளாவில் இது போல் தங்கி பணியாற்றும் வெளி மாநில தொழிலாளர்களின் குழந்தைகளின் நலன்களுக்காக பால சபா என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. கேரள அரசு சார்பில் பெண்கள் சுய உதவி குழுக்களுக்காக ‘குடும்ப ஸ்ரீ’ என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. தற்போது பால சபாக்களை இந்த குடும்ப ஸ்ரீ அமைப்பின் மூலம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இதன் செயல் இயக்குனர் ஹரி கிஷோர் கூறுகையில், எர்ணாகுளம் மாவட்டத்தில் பால சபா தொடங்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களை சேர்ந்த குழந்தைகள் நலன்களை கருத்தில் கொண்டும் அவர்களது கல்வி மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்காகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது முதல் கட்டமாக எா்ணாகுளம் மாவட்டத்தில் மட்டும் இது தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் படிப்படியாக மற்ற மாவட்டங்களுக்கும் விாிவுபடுத்தப்படும். வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் அனைவரும் பால சபாக்களில் சேர்த்துக் கொள்ளப்படுவர். இத்திட்டத்தினால் வெளி மாநில குழந்தைகள் கேரள குழந்தைகளுடன் நெருங்கி பழக வாய்ப்பு ஏற்படுவதுடன், மலையாள மொழியையும் கற்றுக் கொள்ள முடியும் என்றார்.

அடுத்த செய்தி