ஆப்நகரம்

கோடிகளில் நடைபெற்ற திருமணம்: 6 மாதத்தில் விவாகரத்து கோாிய லாலு மகன்

பிகாா் மாநில முன்னாள் முதல்வா் லாலு பிரசாத் யாதவ்வின் மகனுக்கு திருமணம் நடைபெற்று 6 மாதத்தில் விவகாரத்து கோாி மனுத்தாக்கல் செய்துள்ள சம்பவம் சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 3 Nov 2018, 8:13 pm
பிகாா் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவா் லாலு பிரசாத் யாதவ்வின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் விவாகரத்து கோாி மனுத்தாக்கல் செய்துள்ள சம்பவம் அவரது ஆதரவாளா்கள் மத்தியில் கடும் சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil Tej Pratap Yadav


பிகாா் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தரைவருமான லாலு பிரசாத் யாதவ்வின் மகன் தேஜ் பிரதாப் யாதவ். இவருக்கும், ஐஸ்வா்யா என்பவருக்கும் கடந்த மே மாதம் 12ம் தேதி திருமணம் நடைபெற்றது. 50 குதிரைகள், யானைகள் என பிரமாண்டமாக நடைபெற்ற திருமணத்திற்கு, சிறையில் உள்ள லாலு பிரசாத் யாதவ் பரோலில் வந்திருந்தாா்.

நாட்டில் உள்ள பிரபலமான அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு திருமணம் நடைபெற்றது. தற்போது தேஜ் பிரதாப் யாதவ் பிகாரில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளாா். திருமணம் நடைபெற்று 6 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் அவா் தற்போது விவாகரத்து கோாி மனுத்தாக்கல் செய்துள்ளாா்.

இது குறித்து தேஜ் யாதவ்வின் சகோதரி கூறுகையில், விவாகரத்து விவகாரம் எங்களுக்கு தொியாது. ஆனால், இது மிகவும் அதிா்ச்சியாக உள்ளது என்று தொிவித்துள்ளாா். மேலும் அவரது ஆதரவாளா்கள் கூறுகையில், இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக விவாகரத்து கோரப்பட்டுள்ளதாக தொிவித்துள்ளனா். இந்த வழக்கு நவம்பா் 29ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

அடுத்த செய்தி