ஆப்நகரம்

வாஜ்பாய் உடல்நிலை பாதிப்பு குறித்து சிபிஐ விசாரணை தேவை: லாலு பிரசாத் யாதவ்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை பாதிக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை தேவை என ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் தலைவரும், பிகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

TNN 1 Mar 2017, 3:37 am
வாரணாசி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை பாதிக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை தேவை என ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் தலைவரும், பிகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil lalu prasad yadav urges cbi enquiry on ex pm vajpayees health
வாஜ்பாய் உடல்நிலை பாதிப்பு குறித்து சிபிஐ விசாரணை தேவை: லாலு பிரசாத் யாதவ்


மொத்தம் 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநில சட்டபேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, சமாஜ்வாடி - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அதேபோல், முக்கிய கட்சிகளான பாஜக, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தனித்து களம் காண்கின்றன.

அம்மாநிலத்தில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவுற்றுள்ள நிலையில், அடுத்த கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் களம் காணும் தேசிய கட்சிகள் மற்றும் அதனுடைய கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து, இதர மாநிலங்களில் அக்கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அங்கு முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, காங்கிரஸ்-சமாஜ்வாடி வேட்பாளர்களை ஆதரித்து அம்மாநிலத்தின் வாரணாசி நகரில் ஜனதாதள கட்சியின் தலைவரும், பிகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் பிரசாரம் கொண்டார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை பாதிக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை தேவை என வலியுறுத்தினார்.

வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணமாக, அரசியல் மற்றும் பொது நிகழ்சிகளில் முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய் அண்மை காலங்களாக கலந்து கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Lalu prasad yadav urges CBI enquiry on EX Pm Vajpayee's health

அடுத்த செய்தி