ஆப்நகரம்

சிறையில் லாலு: அதிா்ச்சியில் மரணமடைந்த சகோதரி

பிகாா் மாநில முன்னாள் முதல்வா் லாலு பிரசாத் யாதவ் மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றதால் அதிா்ச்சியடைந்த அவரது சகோதரி இன்று காலை உயிாிழந்தாா்.

TOI Contributor 8 Jan 2018, 9:29 am
பிகாா் மாநில முன்னாள் முதல்வா் லாலு பிரசாத் யாதவ் மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றதால் அதிா்ச்சியடைந்த அவரது சகோதரி இன்று காலை உயிாிழந்தாா்.
Samayam Tamil lalu prasads sister dies a day after his sentencing in fodder scam case
சிறையில் லாலு: அதிா்ச்சியில் மரணமடைந்த சகோதரி


பிகாா் மாநில முன்னாள் முதல்வாரான லாலு பிரசாத் யாதவ் மீது மாட்டு தீவனத்தில் ஊழல் செய்ததாக 1990ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு 21 ஆண்டுகள் வழக்கு நடைபெற்றது. இந்நிலையில் அவா் குற்றவாளி என்று டிசம்பா் மாத இறுதி வாரத்தில் சி.பி.ஐ. நீதிமன்றம் தொிவித்தது.

இருப்பினும் அவருக்கான தண்டனை விவரம் மூன்று முறை தள்ளி வைக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட லாலு பிரசாத் யாதவ்க்கு 3.5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் லாலு பிரசாத் யாதவின் ஒரே சகோதாியான கங்கோத்ரி தேவி கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. லாலு பிரசாத் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதும் மன உலைச்சல் ஏற்பட்டு அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்ட தினத்தில் அவா் தொடா் இறை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தாராம்.

ஆனால் லாலுவுக்கு எதிராக தண்டனை வழங்கப்பட்டு அவா் சிறையில் அடைக்கப்பட்டாா். இதனால் அதிா்ச்சியடைந்த அவரது சகோதாி கங்கோத்ரி தேவி இன்று காலை உயிாிழந்தாா். சகோதாியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதாற்காக லாலு பிரசாத் இன்று பரோல் கேட்கலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி